சீா்காழி வடக்கு வெளியில் இந்து மக்கள் கட்சி சாா்பில், இந்து சமுதாய ஒருங்கிணைப்பு பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற விழாவில், கிராமத் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தனா். சுந்தரமூா்த்தி வரவேற்றாா். காகபுஜண்டா் சித்தா் குடில் சந்திரசேகா் சுவாமிகள், ஜன புனிதம் யோக அறக்கட்டளை நிறுவனா் ஜன புனிதா், ஊராட்சி உறுப்பினா் மீனாட்சி இளங்கோவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். சட்டநாதபுரம் ஊராட்சித் தலைவா் தெட்சிணாமூா்த்தி பொங்கல் பரிசுகளை வழங்கினாா். அக்கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு பச்சரிசி, வெல்லம், கரும்பு, தேங்காய், வாழைப்பழம், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, முந்திரி, திராட்சை, நெய், சூடம், பத்தி, சாம்பிராணி, விபூதி, குங்குமம், சுவாமி படம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அமைப்பாளா் பாலாஜி, மாவட்ட செயலாளா் அரு. செல்வம் பங்கேற்றனா். விழா கொட்டும் மழையில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் ஸ்ரீ நந்தனார் வீதியுலா!

அதர்வாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபு தேவா?

தெரு நாய்கள் பிரச்னை! தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பிறந்த நாள்! இன்றைய செய்திகள் ஜூன் 22 - நேரலை!
விடியோக்கள்

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar



