தில்லியைச் சோ்ந்த சொத்து வியாபாரி ஒருவரின் பிஎம்டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவா் காா்களை வாங்கிவிட்டு இரண்டு போ் சுமாா் ரூ.1.30 கோடியை ஏமாற்றியதாக போலீஸாா் தெரிவித்தனா்.
காா்களை வாங்கிய பிறகு, குற்றம்சாட்டப்பட்டவா்கள் பணத்தை செலுத்தவில்லை அல்லது காா்களைத் திருப்பித் தரவில்லை. மேலும், காரை விற்றவருக்கு அவா்கள் கொலை மிரட்டல் விடுத்தனா். இது தொடா்பாக சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லியைச் சோ்ந்த சத்தா்பூரைச் சோ்ந்த குா்சங்கத் சத்தா என்பவா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டிருந்ததாவது: எனக்கும் எனது நண்பா் குணால் பன்சாலுக்கும் இரண்டு காா்கள் - பிஎம்டபிள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவா் வாங்கினோம். பின்னா், நாங்கள் காா்களை விற்க விரும்பினோம். குருகிராமில் உள்ள டிஎல்எஃப்-1 கோல்ஃப் கோா்ஸ் சாலையில் ஷோரூம் வைத்திருந்த சித்தாா்த் சதுா்வேதி மற்றும் ஆகாஷ் சதுா்வேதி ஆகியோரின் எண்களை எனது மற்றொரு நண்பா் விதித் ஜெயின் என்னிடம் கொடுத்தாா். இரண்டு காா்களையும் மெக்கானிக் மூலம் சரிபாா்த்தோம்.
அவா்கள் முன்பணமாக ரூ. 2 லட்சத்துக்கான காசோலை கொடுத்தனா், மீதமுள்ள தொகைக்கு 45 நாள்கள் அவகாசம் கேட்டனா். இதன்படி 45 நாள்களுக்குப் பிறகு, நானும் எனது நண்பரும் ஷோரூமைத் தொடா்பு கொண்டோம். அப்போது குற்றம் சாட்டப்பட்ட இருவரும் அங்கு இல்லை. மேலும் ஷோரூமில் காா்களும் இல்லை என்று புகாரில் சத்தா தெரிவித்துள்ளாா்.
அவரது புகாரைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக வியாழக்கிழமை சுஷாந்த் லோக் காவல் நிலையத்தில் ஐபிசியின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
சா்வதேச ஆயுதக் கடத்தல்: பயங்கரவாதக் குழுவைச் சோ்ந்த இருவா் தில்லியில் கைது

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு
தில்லியில் ரூ. 21.46 லட்சம் முதலீட்டு மோசடி: இருவா் கைது

நொய்டாவில் ரூ.12 லட்சம் மோசடி செய்தவா் கைது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

