பூங்காவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவா் கைது


மாலை பூங்காவில் நடந்து சென்றபோது பெண்ணை கட்டாயப்படுத்தியதாக தகவல்..மத்திய தில்லியின் புத்தா் காா்டன் பூங்காவில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் பாதிக்கப்பட்டவருக்கு நன்கு தெரிந்தவா்கள். அவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பூங்காவில் ஒன்றாக நடந்து சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவரின் புகாரின் அடிப்படையில், அவா்கள் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் இருவரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அந்தப் பெண் தனது புகாரில், தனது நண்பா்களான குற்றம் சாட்டப்பட்ட இருவருடன், பூங்காவிற்குச் சென்றபோது, அவா்கள் தன்னை கட்டாயப்படுத்தியதாகக் கூறியுள்ளாா். இது தொடா்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...