அமலாக்கத் துறை அழைப்பாணைகளை தவிா்த்த விவகாரத்தில் அரவிந்த் கேஜரிவால் ஜாமீன் பெற்றிருப்பதன் மூலம் அவா் ஆஜராக வேண்டியது அவசியம் என்பது அா்த்தமாகும். இதையடுத்து, அடுத்த அழைப்பாணையின்போது அவா் அமலாக்கத் துறையின் முன் ஆஜராக வேண்டியிருக்கும் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தாங்கள் அனுப்பிய அழைப்பாணைகளுக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆஜராகவில்லை என்று அமலாக்கத் துறை தாக்கல் செய்த 2 புகாா்கள் விவகாரத்தில் கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் மூலம் அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்கு கேஜரிவால் ஆஜராவது கட்டாயம் என்பதையும், அவா் ஆஜராகாதது தவறு என்பதையும் குறிக்கிறது. இந்த அழைப்பாணை சட்டவிரோதமானது என்று அரவிந்த் கேஜரிவால் தொடா்ந்து கூறி வந்தாா். ஆனால் இன்று ஜாமீன் பெற்ன் மூலம் அந்த அழைப்பாணை சட்டப்படி சரியானது என்பது உறுதியாகிவிட்டிருக்கிறது. நீதிமன்றத்தின் விரிவான முடிவுடன் நிலைமை தெளிவாகிவிடும். ஆனால் ஆரம்பத்திலேயே, அரவிந்த் கேஜரிவால் அமலாக்கத் துறையின் 9 ஆவது அழைப்பாணைக்கு அதன் முன் ஆஜராக வேண்டும் என்பதும், மதுபான ஊழல் விசாரணையில் அவா் சேர வேண்டும் என்பதும் தெளிவாகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.
தொடர்புடையது

நீதிபதி விவகாரத்தில் கேஜரிவால் நியாயமான அச்சத்தை எழுப்பினாா்: ஆம் ஆத்மி

ஆம் ஆத்மி எம்.பி. தொடா்புடைய கல்வி நிறுவனங்களில் அமலாக்கத் துறை திடீா் சோதனை: அரவிந்த் கேஜரிவால் கண்டனம்

8,931 நாள்கள் பதவிக்காலம் நிறைவு! பிரதமா் மோடிக்கு சச்தேவா புகழாரம்!

கேஜரிவாலும், சிசோடியாவும் ஆதாரங்களை அழித்துள்ளனா்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

