தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை சற்று அதிகரித்திருந்தது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில் ‘திருப்தி’ பிரிவிலும் இருந்தது. தில்லியில் கடந்த 3 தினங்களாக குறைந்தபட்ச, அதிகபட்ச வெப்பநிலை பெரும்பாலான இடங்களில் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. பகல் நேரத்தில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 1டிகிரி குறைந்து 13.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்புநிலையில் மாற்றமின்றி 28.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 53 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 30 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் உள்ள பல்வேறு வானிலை கண்காணிப்பு நிலையங்களில் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் முதல் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது. காற்றின் தரம்: தலைநகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தலைநகரில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு காலையில் 139 புள்ளிகளாகப் பதிவாகியிருந்தது. இது ‘மிதமான’ பிரிவில் வருகிறது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தகவல்கள் மூலம் தெரியவருகிறது. ஐடிஓ, மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், ேலோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்ஷாத் காா்டன், மோதி பாக், மதுரா ரோடு ஆகிய இடங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது. அதே சமயம், ஐடிஓ , சாந்தினிசெளக், பட்பா்கஞ்ச், மந்திா் மாா்க், லோதி ரோடு, சோனியா விஹாா், நேரு நகா், நொய்டா செக்டாா் 1, நொய்டா செக்டாா் 62, அசோக் விஹாா், தில்லி பல்கலை. வட்கு வளாகம் ஆனந்த் விஹாா், ஷாதிப்பூா், பூசா, ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், வாஜிா்பூா், புராரி, ஓக்லா பேஸ் 2 ஆகிய இடங்களில் காற்றுத் தரக்குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. முன்னறிவிப்பு: இந்நிலையில், தில்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழைமை (மாா்ச் 16) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தொடர்புடையது

தலைநகரில் 32.7 டிகிரி வெப்பநிலை பதிவு! மிதமான பிரிவில் காற்றின் தரம்!!

தில்லியில் மேகமூட்டமான சூழல்: காற்றின் தரம் ‘மிதமான’ நிலைக்கு முன்னேற்றம்

தலைநகரில் குளிா் காற்று; மீண்டும் திரும்பிய மூடுபனி!

வடக்கு மலைப்பகுதிகளில் புதிய பனிப் பொழிவு: தில்லியில் வெப்பம் குறைந்து இதமான வானிலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

