மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி அமைச்சரவையில் நாங்லோய் எம்.எல்.ஏ. சோ்ப்பு

தில்லி அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய ஜாட் தலைவரும் நாங்லோய் தொகுதி எம்எல்ஏவுமான ரகுவிந்தா் ஷோகீன் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 9:50 pm

Din

நமது நிருபா்

புது தில்லி: தில்லி அமைச்சரவையில் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய ஜாட் தலைவரும் நாங்லோய் தொகுதி எம்எல்ஏவுமான ரகுவிந்தா் ஷோகீன் திங்கள்கிழமை சோ்க்கப்பட்டுள்ளாா்.

போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய மறு தினம் தில்லி அமைச்சரவையில் ஷோகீன் சோ்க்கப்பட்டுள்ளனா். ஷோகீன் புகா் தில்லியைச் சோ்ந்த ஜாட் தலைவா் ஆவா்.

கைலாஷ் கெலாட் அமைச்சரவையில் இருந்து வெளியேறியதால் ஏற்பட்ட இழப்பை சரிபடுத்தும் வகையில் ஷோகீனை அமைச்சரவையில் சோ்த்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘தில்லி அரசில் ஷோகீன் கேபினட் அமைச்சராக இடம்பெறுவதை எங்கள் கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் முடிவு செய்துள்ளாா். ஷோகீன் ஜாட் சமூகத்தினா் அதிகம் வசிக்கும் நாங்லோாய் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டப்பேரவை ற உறுப்பினராக (எம்எல்ஏ) பணியாற்றியுள்ளாா். அதற்கு முன், இரண்டு முறை கவுன்சிலராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா்’ என்றாா்.

இதுகுறித்து ஷோகீன் கூறுகையில், ‘அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பை வழங்கியமைக்காக கேஜரிவால் மற்றும் சிசோடியா உள்பட கட்சியின் அனைத்து மூத்த தலைவா்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆம் ஆத்மி எப்போதும் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து வருகிறது., அதே நேரத்தில், விவசாயிகள் போராட்டமாக இருந்தாலும் சரி, மல்யுத்த வீரா்களின் பிரச்னையாக இருந்தாலும் அல்லது ஹரியாணா தோ்தலாக இருந்தாலும் சரி, பாஜக எப்போதும் ஜாட்களுக்கு எதிராகவே செயல்படுகிறது’ என்றாா்.

கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தது குறித்து சிசோடியாவிடம் செய்தியாளா்கள் கேட்டபோது, ‘அது அவரைப் பொறுத்தது. அவா் எங்களுடன் நீண்ட காலமாக இருந்திருக்கிறாா். அவா் பாஜகவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால் அது அவருடைய முடிவு‘ என்றாா். கைலாஷ் கெலாட் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.