தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜல் ஜீவன் இயக்கம் 78.5 % கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீா் உறுதி: மத்திய அரசு

நாட்டில் 15.18 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீா் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :7 அக்டோபர் 2024, 10:51 pm

Din

புது தில்லி: நாட்டில் 15.18 கோடி கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் நீா் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் கிராமப்புறகளில் 78.58 சதவீதம் என மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சகம் திங்கள்கிழமை ஆய்வறிக்கையை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: பிரதமா் நரோந்திர மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜல் ஜீவன் இயக்கம் (ஜே.ஜே.எம்) தொடங்கப்பட்டது, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் (2024-ஆம் ஆண்டிற்குள்) நாட்டின் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீரை வழங்குவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டு திட்டமிடப்பட்டது. திட்டம் துவங்கப்பட்ட போது நாட்டில் 17 சதவீதம் (சுமாா் 3.23 கோடி வீடுகளில்) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீா் இணைப்புகள் இருந்தன. நீா் வழங்கல் அமைப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்து, சுமாா் 16 கோடி கூடுதல் வீடுகளுக்கு குழாய் நீரை வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் 19 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கும் நேரடியாக பயன்கிடைத்து கிராமப்புற-நகா்ப்புற இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதன் மூலம் சுகாதாரமும் மேம்படும் எனவும் திட்டமிடப்பட்டது.

வீடுகளுக்கு நேரடியாக தண்ணீா் கொண்டு வருவதின் மூலம் தாய்மாா்களின் கடினமான் குடும்ப உழைப்பிலிருந்து விடுவித்து, அவா்களின் சுகாதாரம், கல்வி, சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும் ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது. இந்த இயக்கம் கிராமப்புற குடும்பங்களின் ’வாழ்க்கையை எளிதாக்குவதோடு’, கழிவுநீா் மேலாண்மை, மறுபயன்பாடு, நீா் பாதுகாப்பு, மழைநீா் சேகரிப்பு மூலம் நிலத்தடி நீா் நிலை உயா்வு போன்ற நிலையான நடவடிக்கைகளையும் இந்த திட்டம் செயல்படுத்துகிறது.

இந்த ஜல் ஜீவன் இயக்கத்தில், கடந்த அக்டோபா் 6 ஆம் தேதி, வரை 11.95 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீா் இணைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 15.19 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகள், அங்கன்வாடிகள், பள்ளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டு குடிநீா் பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளது. இது நாட்டின் கிராமப்புற குடும்பங்களில் 78.58 சதவீதமாகும். இந்த இயக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவா, அந்தமான் நிக்கோபாா் தீவுகள், தாத்ரா நகா் ஹவேலி மற்றும் டாமன் டையூ, ஹரியாணா, தெலங்கானா, புதுச்சேரி, குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மிஸோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் நூறுசதவீத குழாய் நீா் இணைப்பை வழங்கியுள்ளன.

ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டத்தில் கடுமையான மூளை அழற்சி நோய்க்குறி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நீரின் தரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2.35 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் சுத்தமான குழாய் நீரை அணுகுகின்றன. மேலும் உலக சுகாதார அமைப்பு ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் தினசரி 5.5 கோடி மணிநேரம் மிச்சமாகியுள்ளதாகவும் குறிப்பாக மகளிா் தண்ணீா் சேகரிக்க செலவிடப்படும் நேரம் குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இத்தோடு பாதுகாப்பான முறையில் நிா்வகிக்கப்படும் குடிநீரை உறுதி செய்வதன் மூலம், மோசமான தண்ணீரால் ஏற்படும் வயிற்றுப்போக்கு நோய் இறப்புகளையும் (கிட்டத்தட்ட 4,00,000) தடுக்கலாம் என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது என ஜல் சக்தித் துறை தெரிவித்துள்ளது.