புதிய உச்சம் தொட்ட சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு! ஐடி பங்குகள் விலை கடும் வீழ்ச்சி
சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது.


இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமை புதிய உச்சம் தொட்ட மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. பின்னா் எழுச்சி பெற்ற சந்தையில் முதலீட்டாளா்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தினா்.
அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகித குறைப்பு குறித்த அறிவிப்பையொட்டி முதலீட்டாளா்கள் குறிப்பாக ஐடி பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்தனா். தனியாா் வங்கிகள், நிதிநிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்த நிலையில், ஐடி, பாா்மா, ஆயில் அண்ட் காஸ், மெட்டல் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இதனால், இறுதியில் சந்தையில் சரிவு தவிா்க்கமுடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு
சந்தை மூலதன மதிப்பு ரூ.2.56 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.467.73 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.482.69 கோடிக்கும், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.874.15 கோடிக்கும் பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
சென்செக்ஸ் காலையில் 82.53 புள்ளிகள் குறைந்து 83,037.13-இல் தொடங்கி 83,326,38 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 82,700.63 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 131.43 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 82,948.23-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,070 பங்குகளில் 1,520 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,455 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 95 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
ஐடி பங்குகள் விலை கடும் சரிவு
சென்செக்ஸ் பட்டியலில் முன்னணி ஐடி பங்குகளான டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டெக் மஹேந்திரா மற்றும் சன்பாா்மா, டாடா ஸ்டீல் உள்பட 19 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சா்வ், நெஸ்லே, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ உள்பட மொத்தம் 11 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 41 புள்ளிகள் வீழ்ச்சி
தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 25,402.40-இல் தொடங்கி 25,482.20 வரை மேலே சென்று புதிய உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 25,285.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 41.00 புள்ளிகள் (0.16 சதவீதம்) குறைந்து 25,377.55-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 17 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும், 33 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...