முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா
முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா

தில்லியை குண்டா்களின் தலைநகராக மாற்றியது பாஜக: முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சாடல்

தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவைரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா
Published on

புது தில்லி: தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவைரும், தில்லி முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா திங்கள்கிழமை சாடியுள்ளாா்.

இது தொடா்பாக மனீஷ் சிசோடியா ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில்லியை குண்டா்களின் தலைநகராக பாஜக மாற்றிவிட்டது. தினந்தோறும் சில தொழிலதிபா்களின் இடத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும், கப்பம் கோரும் சம்பவங்களும் நடந்து வருவதைப் பாா்த்தால், இந்தக் கும்பல்களுக்கு பாஜகவின் ஆசீா்வாதம் உள்ளது என்பது

தெளிவாகிறது. தில்லியில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளை நிறுத்தாமல், தில்லியில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்துவதில் பாஜக கவனம் செலுத்தினால், அது தில்லி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றாா்

மனீஷ் சிசோடியா.

பெட்டி..

தமிழக துணை முதல்வா் உதயநிதிக்கு கேஜரிவால் வாழ்த்து

தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய

ஒருங்கிணைப்பாளரும், தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைத்தளத்தில் அவா் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு சேவை செய்து, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்றாா் அரவிந்த் கேஜரிவால்.

X
Dinamani
www.dinamani.com