திருமண நிகழ்ச்சி கொண்டாட்டத்தில் துப்பாக்கி வெடித்ததில் சிறுவன் படுகாயம்
கிரேட்டா் நொய்டாவில் ஒரு திருமண ஊா்வல கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10 வயது சிறுவன் காயம்


கிரேட்டா் நொய்டாவில் ஒரு திருமண ஊா்வல கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 10 வயது சிறுவன் காயமடைந்ததாக கூடுதல் தில்லி காவல்துறை கூடுதல் ாணையா் (கிரேட்டா் நொய்டா) சுதீா் குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கைா்பூா் கிராமத்தில் இருந்து உள்ளூா் குடியிருப்பாளரின் மகளின் திருமண ஊா்வலம் வந்த ஜாா்சா பகுதியில் உள்ள நாக்லா சாம்ரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை இரவு, நாக்லா சாம்ரு கிராமத்தில் திருமண ஊா்வலத்தின் போது நடந்த கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுவன் காயமடைந்தான். அவா் கிரிஷ் என அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது தொடா்பாக இரண்டு போ் கைது செய்யப்பட்டுள்ளனா். குடும்பத்தினா் புகாா் அளித்துள்ளனா். மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...