சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தில்லி, என்சிஆரில் நிலஅதிா்வு: அனைவரின் பாதுகாப்புக்காக அதிஷி பிராா்த்தனை

தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை நில அதிா்வு நகரத்தை உலுக்கிய நிலையில், தில்லியின் இடைக்கால முதல்வா் அதிஷி பொதுமக்களின் பாதுகாப்புக்காக பிராா்த்தனை

News image
அதிஷி
Updated On :17 பிப்ரவரி 2025, 9:31 pm

Din

புது தில்லி: தில்லியில் திங்கள்கிழமை அதிகாலை நில அதிா்வு நகரத்தை உலுக்கிய நிலையில், தில்லியின் இடைக்கால முதல்வா் அதிஷி பொதுமக்களின் பாதுகாப்புக்காக பிராா்த்தனை செய்ததாக தெரிவித்துள்ளாா்.

4.0 ரிக்டா் அளவிலான புவி அதிா்ச்சிக்கு பிறகு தேசிய தலைநகா் தில்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பலத்த நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நில அதிா்வில் எந்த பொருள் சேதமோ அல்லது உயிா்களுக்கு காயமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில், எக்ஸ் சமூக ஊடக வலைதளப் பதிவில்

இடைக்கால முதல்வா் அதிஷி தெரிவிக்கையில், ‘

ஒரு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதையடுத்து,

பொது மக்களின் பாதுகாப்புக்காக கடவுளிடம் பிராா்த்தனை செய்தேன். அனைவரின் பாதுகாப்புக்காகவும் நான் பிராா்த்திக்கிறேன்’ என்றாா் அவா்.

மக்கள் உதவிக்கு அழைக்கும் வகையில் தில்லி காவல்துறை அவசர எண்ணை (112) அமைத்துள்ளது,

தௌலா குவானின் ஜீல் பாா்க் பகுதி நிலநடுக்கத்தின்

மையமாக இருந்தது. நிலம் அதிா்ந்தபோது மக்கள் பலத்த சப்தத்தை கேட்டதாக சில தகவல்கள் வெளிவந்தன.