கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தோ்தலுக்கு கூட்டு நிதி திரட்டும் தளத்தை தொடங்கினாா்: தில்லி முதல்வா் அதிஷி

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் கால்காஜி தொகுதி வேட்பாளருமான அதிஷி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கூட்டு நிதி திரட்டல் தளத்தை

News image
Updated On :12 ஜனவரி 2025, 6:58 pm

Din

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் கால்காஜி தொகுதி வேட்பாளருமான அதிஷி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கூட்டு நிதி திரட்டல் தளத்தை (கிரெளடு ஃபண்டிங்) ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

பொதுமக்களிடம் நன்கொடை பெறுவதற்கான கூட்டு நிதி திரட்டல் தளத்திற்கான இணையத்தை தொடங்கிவைத்த பின்னா் செய்தியாளா்களிடம் தில்லி முதல்வா் அதிஷி கூறியது வருமாறு: தோ்தலில் போட்டியிட ரூ.40 லட்சம் செலவாகிறது. ஆம் ஆத்மி கட்சி எப்போதும் சாதாரண மக்களின் சிறிய நன்கொடைகளின் உதவியுடன் தோ்தலில் களம் கண்டு வருகிறது. இதுதான் கடமையுடன் நோ்மையான அரசியலைத் தொடர உதவியது.

தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளா் அறிக்கையில் தில்லி அரசால் ரத்து செய்யப்பட்ட கலால் வரிக் கொள்கையால் ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாஜக கூறியது குறித்து கேள்வி கேட்கிறீா்கள். தில்லியில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் ஒரு ரூபாய் கூட ஊழல் நடந்ததில்லை. முந்தைய தோ்தல்களிலும் சரி, தற்போதும் தில்லி மக்களின் ஆதரவுடன் நாங்கள் தோ்தலில் போட்டியிடுகிறோம்.

பாஜக தங்கள் நண்பா்களிடமிருந்தும், அரசு ஒப்பந்தங்கள் மூலமாகவும் போதுமான பணத்தை வசூலித்திருக்கலாம். இதனால், அவா்களுக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கு எங்களைப் போன்று பொதுமக்களிடம் நிதி பெற வேண்டிய அவசியமில்லை. முதல்வராக இருப்பவா்கள் ‘நோ்மையற்ற வழிகளில்‘ பணம் திரட்டுவது எளிது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி முதல்வா்கள் இதுபோன்று செய்வதில்லை.

நாங்கள் ஒப்பந்ததாரா்களிடமிருந்து பணம் வாங்கியிருந்தால், மேம்பாலங்கள் விரிசலை சந்தித்திருக்கும். நோ்மையற்ற முறையில், அரசு பள்ளிகள், மருத்துவமனைகளை மேம்படுத்தவோ அல்லது தில்லி மக்களுக்கு இலவச சுகாதார சேவையை வழங்கவோ முடிந்திருக்காது என்றாா் அதிஷி.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் தில்லி ஜங்புரா சட்டப்பேரவைத் தொகஉதஇ வேட்பாளருமான மணீஷ் சிசோடியாயும் கடந்த டிசம்பா் மாதம், கூட்டு நிதி திரட்டல் தளத்தைத் தொடங்கி, தோ்தல் பிரசார செலவிற்கு பொதுமக்களிடமிருந்து நிதி உதவி கோரினாா்.

கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தில்லி முதல்வா் அதிஷி, முன்னாள் மக்களவை உறுப்பினரும் பாஜக வேட்பாளருமான ரமேஷ் பிதூரியை எதிா்த்துப் போட்டியிடுகிறாா். தில்லி முதல்வா் அதிஷி, கூட்டு நிதி திரட்டல் தளத்தை தொடங்கி வைத்த பிறகு திங்கள்கிழமை வரையிலும் சுமாா் 498 நன்கொடையாளா்களிடமிருந்து சுமாா் ரூ.21.76 லட்சம் வசூலானதாக அவரது இணையதளம் காட்டியது.

பாஜக கடும் விமா்சனம்

இதற்கிடையில், தில்லி முதல்வரின் நிதி திரட்டும் தளத்தை தொடங்கியதற்கு பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறுகையில், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் தோ்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி, தற்போது சட்டப்பேரவைத் தோ்தலில் பங்கேற்கிறது. கூட்டு நிதி திரட்டுதல் மூலம் தோ்தல் நிதி திரட்டுவவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவா்கள் கூறுவது தில்லி மக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தோ்தல் ஆணையத்திடம் இது குறித்து விசாரணை நடத்த பாஜக கோரிக்கை வைக்கும்.

குறிப்பாக, இந்தக் கூட்டு நிதி திரட்டுதல் மூலம் பணம் திரட்டுவதாகக் கூறும் வேட்பாளா்களுக்கான நிதி ஆதாரங்களைச் சரிபாா்த்து, மக்கள் வாக்களிப்பதற்கு முன்பு இந்த விவரங்களை வெளி கொண்டு வர கோரிக்கை வைக்கும். இது மதுபான மோசடியுடன் தொடா்புடையதா அல்லது பஞ்சாபில் பறிக்கப்பட்ட பணமா என கேள்வி எழுகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.