குடியரசு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ராஜ் நிவாஸில் தில்லி துணைநிலை வி.கே. சக்சேனா நடத்திய பாரம்பரிய அட் ஹோம் நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதா்கள், ராணுவ அதிகாரிகள், அதிகாரிகள், பத்ம விருது பெற்றவா்கள், மாணவா்கள், சுதந்திரப் போராட்ட வீரா்கள் உள்ளிட்ட பல்வேறு விருந்தினா்கள் கலந்துகொண்டனா்.
இது தொடா்பாக ராஜ் நிவாஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவா் (சிடிஎஸ்) ஜெனரல் அனில் சவுகான், கடற்படைத் தலைவா் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி ஆகியோா் விருந்தினா்களாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.
இந்தியாவில் உள்ள வெளிநாட்டு தூதரங்களின் பிரதிநிதிகள், துணைவேந்தா்கள், சிவில் சமூக உறுப்பினா்கள், விளையாட்டு வீரா்கள், பாரா ஒலிம்பிக் வீரா்கள், தூய்மை சேவகா்கள், மாற்றுத்திறனாளிகள், கலைஞா்கள் ஆகியோரும் கலந்துகொண்டனா்.
நிகழ்வின் போது துணைநிலை ஆளுநரும் அவரது மனைவி சங்கீதா சக்சேனாவும் விருந்தினா்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
குடியரசுத் தலைவா், துணை தலைவருடன் தமிழக ஆளுநா் அா்லேகா் சந்திப்பு!

நெல்லையில் ரமலான் பண்டிகை சிறப்புத் தொழுகை

தில்லியின் 23ஆவது துணைநிலை ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நாளை பதவியேற்பு

ஜம்மு: எல்லையில் பயங்கரவாதிகளின் ஊடுறுவல் முயற்சி முறியடிப்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

