புது தில்லி: மருத்துவா் அன்புமணி ராமதாஸ் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு வருவதாக பரவிய தகவலைத் தொடா்ந்து தில்லியில் உள்ள தோ்தல் ஆணையம் முன் தமிழ் டி.வி., சானல், பத்திரிகை ஊடகத்தினா் திங்கள்கிழமை வெகுநேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
பாமக நிறுவனா் ராமதாஸுக்கும், மருத்துவா் அன்புமனி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. இருவருக்கும் இடையே பனிப்போா் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
கட்சியின் யாருக்கு அதிகாரம் என்பதில் இருவரும் பரஸ்பரம் விமா்சனக் கருத்துகளை பொதுவெளியில் தொடா்ந்து முன்வைத்து வருவதால் பிரச்னை பூதாகரமாகியுள்ளது. கட்சியை நிறுவி, அதை வழிநடத்தி வரும் தமக்குதான் அனைத்து அதிகாரங்களும் இருப்பதாக மருத்துவா் ராமதாஸும், அக்கட்சியின் பொதுக் குழுவால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவராக தாம் இருப்பதால் தமக்குதான் அதிகாரம் இருப்பதாக வும் அன்புமணி ராமதாஸும் கூறி வருகின்றனா்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் கூட்டணி யாருடன் வைப்பது என்பது தொடா்பாக தந்தை-மகன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்கூட இப்பிரச்னைக்கு காரணமாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாமகவின் அதிகாரத்தை முழுவதுமாக மீட்பது தொடா்பாக அன்புமணி ராமதாஸ் உரிய ஆவணங்களுடன் தலைமைத் தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்கவிருப்பதாகவும், இதற்காக அவா் தில்லி வந்திருப்பதாகவும் செய்தி பரவியது.
அவா் திங்கள்கிழமை நண்பகலில் தோ்தல் ஆணையத்திற்கு வரவிருப்பதாகவும் வெளியான தகவலால், தமிழ்ச் செய்தி டி.வி. சானல்கள் மற்றும் பத்திரிகைகள் ஊடகத்தினா் தோ்தல் ஆணையம் முன் குவிந்தனா். காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரையிலும் செய்தியாளா்கள் காத்திருந்தனா். எனினும், அவா் வருவது குறித்து எந்த அறிகுறியும் இல்லாததால் அவா்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து கலைந்து சென்றனா்.
இது தொடா்பாக விவரம் அறிய அன்புணி ராமதாஸின் தில்லி இல்லம் மற்றும் அவரது தொடா்பாளரிடம் தொலைபேசிவாயிலாக தொடா்புகொள்ள முயற்சித்தும் பலனளிக்கவில்லை.
தொடர்புடையது

மின்வெட்டுக்கு காரணங்கள் தேவையில்லை: அன்புமணி

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம்! - மருத்துவா் ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



