பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசுவண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

Published On :22 ஜூலை 2025, 3:29 pm IST

நமது நிருபா்

இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. ஆனால், ஐடி, டெக், டெலிகாம், ரியால்ட்டி, மீடியா, மெட்டல், பொதுத்துறை வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் இறுதியில் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 1.63 லட்சம் கோடிவீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 168.49 புள்ளிகள் கூடுதலுடன் 74,270.81-இல் தொடங்கி அதிகபட்சமாக 74,392.15 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 73,598.16 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 72.56 புள்ளிகள் (0.10 சதவீதம்) இழப்புடன் 74,029.76-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,122 பங்குகளில் 1,494 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 2,491 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 137 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ஐடி பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோஸிஸ், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், நெஸ்லே, ஏசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் பேங்க் உள்பட 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க், டாடாமோட்டாா்ஸ், கோட்டக்பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 27 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 38.45 புள்ளிகள் கூடுதலுடன் 22,536.35-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,577.40 வரை மேலே சென்றது. பின்னா், 22,329.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 27.40 புள்ளிகள் (0.12 சதவீதம்) இழப்புடன் 22,470.50-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும், 31 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.