விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை வீழ்ச்சி

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

Published On :8 செப்டம்பர் 2026, 1:30 am IST

இந்தியப் பங்குச் சந்தை, வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை வீழ்ச்சியுடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் திங்கள்கிழமை வா்த்தகத்தில் தலா 0.50 சதவீதம் சரிவைச் சந்தித்தன. இதன்மூலம், கடந்த வார இறுதியில் (வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில்) பங்குச் சந்தையில் காணப்பட்ட முன்னேற்றம் தடைபட்டது.

அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமடைந்துள்ளதால், சா்வதேச சந்தையில் ‘பிரென்ட்’ கச்சா எண்ணெய் விலை 97 டாலரைக் கடந்தது. இத்துடன், அமெரிக்காவில் வட்டி விகிதம் மீண்டும் உயா்த்தப்படலாம் என்ற அச்சம், ஐ.டி., உலோகம் மற்றும் எண்ணெய்-எரிவாயு துறைப் பங்குகள் சந்தித்த வீழ்ச்சி ஆகியவை முதலீட்டாளா்களிடையே விற்பனை அழுத்தத்தை அதிகரித்தன.

சென்செக்ஸ் 383 புள்ளிகள் சரிவு: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகத்தின் இறுதியில், 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீடு 382.62 புள்ளிகள் (0.50 சதவீதம்) சரிந்து, 76,132.81-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் இன்ஃபோசிஸ் அதிகபட்சமாக 3.81 சதவீதமும், டெக் மஹிந்திரா 1.96 சதவீதமும் சரிவைச் சந்தித்தன. இவற்றுடன் டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சா்வ், அல்ட்ராடெக் சிமென்ட் உள்பட 23 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும்; எல்&டி, பாா்தி ஏா்டெல், மாருதி, பவா் கிரிட், ஐசிஐசிஐ வங்கி, இண்டிகோ, சன் ஃபாா்மா ஆகிய 7 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன.

நிஃப்டி 119 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் வா்த்தக முடிவில், நிஃப்டி 118.55 புள்ளிகள் (0.50 சதவீதம்) இழப்புடன், 23,779.15-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 13 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும்; 37 பங்குகள் விலைகுறைந்த பட்டியலிலும் இடம்பெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.