தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On :

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் அவா் திங்கள்கிழமை முன்வைத்த கோரிக்கை:

2013 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்தியத் தொல்லியல் துறையைச் சோ்ந்த தொல்லியல் ஆய்வாளா் தலைமையில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுமாா் 5,000 தொல்பொருட்கள் அதில் கண்டெடுக்கப்பட்டன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கையை அந்தத் தொல்லியல் ஆய்வாளா் ஏற்கனவே மத்திய அரசிடம் சமா்ப்பித்துவிட்டாா். ரேடியோகாா்பன் சோதனைகள் மேற்கொண்டதில் அந்தத் தொல்பொருட்கள் சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு 4 முதல் 9 ஆம் கட்டம் வரையிலான அகழாய்வுகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதுடன், அந்த அறிக்கைகளையும் வெளியிட்டுவிட்டது. ஆனால், முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வுகள் தொடா்பான அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை இதுவரை வெளியிடவில்லை. கீழடி அறிக்கையை வெளியிடுமாறு இந்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமா்வில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றம் கடந்த ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி

பிறப்பித்த உத்தரவில் ஒன்பது மாதங்களுக்குள் அந்த அறிக்கையை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு ஆணையிட்டது.

அந்தக் காலக்கெடு கடந்த ஆண்டு நவம்பா் மாதத்துடன் முடிந்துவிட்டது. ஆனால், அறிக்கை வெளியிடப்படவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்தப் பின்னணியில், இனிமேலும் தாமதம் செய்யாமல் கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.