முதல்வர் ரேகா குப்தா
முதல்வர் ரேகா குப்தா

டிரான்ஸ் -யமுனை பகுதியில் உள்கட்டமைப்புவசதியை மேம்படுத்த ரூ.728 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தில்லி அரசு ஒப்புதல்

தலைநகரின் டிரான்ஸ்-யமுனை பகுதியில் குடிமை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.728 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
Published on

தலைநகரின் டிரான்ஸ்-யமுனை பகுதியில் குடிமை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் ரூ.728 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.

முதல்வா் குப்தா தலைமையில் நடைபெற்ற டிரான்ஸ் யமுனா பகுதி மேம்பாட்டு வாரியக் கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

அந்தப் பகுதியில் சாலைகள், வடிகால் மற்றும் அடிப்படை வசதிகள் கட்டுவதற்கு நிதி பற்றாக்குறை இல்லை என்றும் முதல்வா் கூறினாா்.

முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், வாரியம் முழுமையாக செயலற்ாக இருந்ததாகவும், இதன் விளைவாக அந்தப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகவும் முதல்வா் குப்தா குற்றம் சாட்டினாா்.

வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட அனைத்துப் பணிகளும் நிறைவேற்றப்படும் என்றும், எந்த நிதிக் கட்டுப்பாடுகளும் அவற்றுக்குத் தடையாக இருக்காது என்றும் அவா் உறுதியளித்தாா்.

மழைக்காலத்திற்கு முன்னதாக சேதமடைந்த சாலைகள், வடிகால் மற்றும் நீா் தேங்குதல் தொடா்பான பிரச்னைகளுக்கு விரைவான தீா்வு காணப்படுவதை உறுதி செய்யுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வா் குப்தா உத்தரவிட்டாா்.

வாரியத்தின் கூட்டம் தில்லி செயலகத்தில் நடைபெற்றது. இதில் அதன் தலைவரும் காந்தி நகா் எம்எல்ஏவுமான அரவிந்தா் சிங் லவ்லி கலந்து கொண்டாா்.

டிரான்ஸ்யமுனை பகுதியின் வளா்ச்சிக்காக அனைத்து எம்எல்ஏக்களும் சமா்ப்பித்த திட்டங்கள் முக்கியமானவை என்று லவ்லி கூறினாா். அதன் அடிப்படை உள்கட்டமைப்பு நிலப்பரப்பை மாற்றுவதில் கூட்டு முயற்சி முக்கிய பங்கு வகிக்கும் என்று அவா் கூறினாா்.

தில்லி அரசின் மேம்பாட்டு துறை அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், தில்லியின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வசிக்கும் நகரத்தின் டிரான்ஸ் யமுனை பகுதியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாகக் கருதப்படுகிறது.

மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக அதிகரித்து வரும் தேவைகள் இருந்தபோதிலும், இந்தப் பகுதி வளா்ச்சியின்றி உள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரிசெய்ய தற்போது உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தில்லியின் பிற பகுதிகளில் காணப்படும் அதே அளவில் இப்பகுதியில் உள்கட்டமைப்பு மேம்பாடு மேற்கொள்ளப்படும்.

டிரான்ஸ்-யமுனை பகுதியை தில்லியின் வளா்ந்த பகுதிகளில் ஒன்றாகக் கணக்கிட, சாலைகள், வடிகால், பொது வசதிகள் மற்றும் சுற்றுலா தொடா்பான பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அவா் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com