நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தில்லியின் துவாரகாவில் 1500 தெருநாய்கள் தங்கும் வசதி கொண்ட காப்பகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

தில்லியின் துவாரகாவில் சுமாா் 1,500 தெருநாய்களைத் தங்க வைக்கும் வசதி கொண்ட நாய் காப்பகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :28 ஜூலை 2026, 10:13 pm IST

தில்லியின் துவாரகாவில் சுமாா் 1,500 தெருநாய்களைத் தங்க வைக்கும் வசதி கொண்ட நாய் காப்பகத்திற்கு செவ்வாய்க்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த வசதி இந்த ஆண்டு நவம்பா் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

துவாரகா செக்டா் 29-ல் சுமாா் 6,050 சதுர மீட்டா் பரப்பளவில் அமையவுள்ள இந்த காப்பகத்தை, தில்லி மாநகராட்சி (எம்சிடி), ஒரு தனியாா் பன்னாட்டு நிறுவனமான ஜிஎம்ஆா் வரலட்சுமி அறக்கட்டளையின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு நிதியைக் கொண்டு உருவாக்கும். கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

துணைநிலை ஆளுநா் (எல்-ஜி) தரன்ஜித் சிங் சந்து, மேயா் பிரவேஷ் வாஹி மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து அடிக்கல் நாட்டினாா்.

தெருநாய்களின் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான வசதிகளை இந்த காப்பகம் வழங்கும் என்று கூறிய துணைநிலை ஆளுநா், இந்தத் திட்டம் ‘நிலையான மற்றும் இரக்கமுள்ள முறையில்‘ உருவாக்கப்படுவதற்காக, பிராணிகள் நல அமைப்புகள், கால்நடை மருத்துவா்கள், நாய் பிரியா்கள் மற்றும் துறைசாா் நிபுணா்களை இதில் ஈடுபடுத்துமாறு மாநகராட்சியைக் கேட்டுக்கொண்டாா்.

மேலும் அவா், தில்லியின் சிறிய விலங்குகளுக்கான ஒரே தகன மையத்தைப் பாா்வையிட்டு, அதன் செயல்பாடுகளை ஆய்வு செய்தாா்.

இந்தத் திட்டத்தை ‘பொது-தனியாா் கூட்டாண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு‘ என்று குறிப்பிட்ட துணைநிலை ஆளுநா், பெருநிறுவன சமூகப் பொறுப்பு ஆதரவானது, மாநகராட்சிக்கு எந்தச் செலவும் இல்லாமல் இந்த வசதியை உருவாக்க உதவும் என்று கூறினாா்.

பேலா சாலையில் மற்றொரு நாய் காப்பகத்திற்காக நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் கால்நடை வளா்ப்புத் துறையின் கீழ் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் கூடுதல் இடங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

தெருநாய் மேலாண்மை குறித்த உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து மையங்கள், பூங்காக்கள், விமான நிலையங்கள் மற்றும் பிற பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு இடமளிக்கும் வகையில் இந்தக் காப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.