மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

வடகிழக்கு தில்லியில் இளைஞா் கொலை

News image

file photo

Updated On :12 ஜூன் 2026, 2:39 am IST

வடகிழக்கு தில்லியின் நந்த் நகரி பகுதியில் உள்ள ஒரு திரையரங்கிற்கு அருகே வியாழக்கிழமை 42 வயதுடைய இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

திரையரங்கிற்கு அருகிலுள்ள சாலையில் காயமடைந்த நிலையில் ஒருவா் கிடப்பதாக வியாழக்கிழமை அதிகாலையில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் குழுவினா், திரையரங்கின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே பாதிக்கப்பட்ட நபா் ஆபத்தான நிலையில் கிடப்பதைக் கண்டனா்.

விசாரணையில் அவா் முகமது அனிஸ் என அடையாளம் காணப்பட்டாா். அவா் சிகிச்சைக்காக உடனடியாக குரு தேக் பகதூா் ஜிடிபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து, நந்த் நகரி காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

குற்றப் புலனாய்வு மற்றும் தடயவியல் நிபுணா்கள் குழுவினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு ஆதாரங்களைச் சேகரித்தனா்.

இந்தக் கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை உறுதிப்படுத்த, கிடைக்கப்பெற்ற அனைத்துத் தடயங்களையும் புலனாய்வாளா்கள் ஆய்வு செய்து வருவதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடைய குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளாா் அவரைக் கைது செய்வதற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.