தில்லி விமான நிலையத்தில் ரூ.4.4 கோடி மதிப்புள்ள 12 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்: பயணி கைது
தில்லியிலுள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், சுமாா் ரூ.4.49 கோடி மதிப்புள்ள, 12.2 கிலோ சந்தேகத்திற்கிடமான கஞ்சாவைக் கடத்தியதாகக் கூறப்படும் இந்தியப் பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்ததாக வெளியிடப்பட்ட ஓா் அறிக்கை தெரிவித்தது.

தில்லி விமான நிலையம் - கோப்புப் படம்
தில்லியிலுள்ள இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில், சுமாா் ரூ.4.49 கோடி மதிப்புள்ள, 12.2 கிலோ சந்தேகத்திற்கிடமான கஞ்சாவைக் கடத்தியதாகக் கூறப்படும் இந்தியப் பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் கைது செய்ததாக புதன்கிழமை வெளியிடப்பட்ட ஓா் அறிக்கை தெரிவித்தது.
நவம்பா் 3 அன்று ஹனோய் வழியாக பாங்காக்கிலிருந்து வந்த அந்தப் பயணி, முனையம் 3-ல் சுங்க அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டதன் அடிப்படையில் இடைமறிக்கப்பட்டாா் என்று தில்லி சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
அந்தப் பயணி எக்ஸ்-ரே பரிசோதனைக்காக கிரீன் சேனலுக்குத் திருப்பி விடப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, அவரது தனிப்பட்ட மற்றும் பயணப் பொருட்கள் சோதனையிடப்பட்டபோது, சாம்பல் நிற டிராலி பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, கஞ்சா (மரிஜுவானா) என சந்தேகிக்கப்படும் பச்சை நிறப் பொருள் அடங்கிய 20 பாலித்தீன் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா் என்று அந்த அறிக்கை கூறியது. அந்த அறிக்கையின்படி, மீட்கப்பட்ட பொருளின் நிகர எடை 12.285 கிலோ ஆகும், அதன் மதிப்பு ரூ.4.49 கோடி ஆகும்.
முதற்கட்ட பரிசோதனையில் அது கஞ்சா என்பது உறுதியானதை அடுத்து, அந்த போதைப்பொருள் அதன் பொட்டலத்துடன் பறிமுதல் செய்யப்பட்டு, பயணி போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

