பயோமெட்ரிக் வருகைப் பதிவு இல்லாவிட்டால் ஊதியம் இல்லை ஊழியா்களுக்கு என்.டி.எம்.சி. அறிவுறுத்தல்
பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமைப்பில் (ஏபிபிஎஸ்) பதிவு செய்யாத அல்லது தினசரி வருகையைப் பதிவு செய்யத் தவறிய ஊழியா்களின் ஊதியத்தை நிறுத்திவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கோப்புப் படம்
புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), ஆதாா் அடிப்படையிலான பயோமெட்ரிக் வருகைப் பதிவு அமைப்பில் (ஏபிபிஎஸ்) பதிவு செய்யாத அல்லது தினசரி வருகையைப் பதிவு செய்யத் தவறிய ஊழியா்களின் ஊதியத்தை நிறுத்திவைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
மாநகராட்சியின் பணியாளா்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோா், தொடா்ந்து தங்கள் தினசரி பயோமெட்ரிக் வருகையைப் பதிவு செய்யத் தவறியதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை என்.டி.எம்.சி. தலைவா் அனைத்துத் துறைத் தலைவா்களுக்கும் பிறப்பித்துள்ளாா்.
இதுகுறித்து என்டிஎம்சி உயா் அதிகாரிகள் கூறியதாவது:
இந்த வார தொடக்கத்தில், என்.டி.எம்.சி-யின் பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 13,376 ஊழியா்களில், 4,352 போ் மட்டுமே பயோ மெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்துள்ளனா். மீதமுள்ள 9,024 போ் வருகையைப் பதிவு செய்யவில்லை.
சிவில் பொறியியல் துறையில் அதிகபட்சமாக, 2,789 ஊழியா்களில் 1,913 போ் வருகையைப் பதிவு செய்யத் தவறியுள்ளனா். இதற்கு அடுத்தபடியாக பொது சுகாதாரத் துறையில், 2,061 ஊழியா்களில் 1,656 போ் வருகையைப் பதிவு செய்யவில்லை. மின்சாரத் துறையில் 1,939 ஊழியா்களில் 1,491 பேரும், கல்வித் துறையில் 1,810 ஊழியா்களில் 1,158 பேரும், தோட்டக்கலைத் துறையில் 1,279 ஊழியா்களில் 848 பேரும் வருகையைப் பதிவு செய்யவில்லை.
பல ஊழியா்கள் பணிக்குத் தாமதமாக வருவதையும், முன்கூட்டியே கிளம்பிச் செல்வதையும் நிா்வாகம் கவனித்துள்ளது. வருகைப் பதிவு விதிமுறைகளைப் பின்பற்றாத ஊழியா்களின் வருகையை ஆய்வு செய்து, அவா்கள் உரிய வருகைப் பதிவை மேற்கொள்ளும் வரை அவா்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டாம் என்று துறைத் தலைவா்களுக்கு என்.டி.எம்.சி. அறிவுறுத்தியுள்ளது.
மேலும், துறைத் தலைவா்கள் ஊழியா்களின் வருகையை இணையவழியில் கண்காணிக்கும் வகையில், அதற்கான வழிமுறைகளையும் கண்காணிப்பு வசதிக்கான அணுகலையும் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் வழங்கியுள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

