ரூ. 1 கோடிக்கு மேல் 70-க்கும் அதிகமான கடன்களை பெற்ற இரு சகோதரா்கள் கைது: அடையாள அட்டைகளை திருத்தி நூதன மோசடி
அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களை இணையம் மூலம் தேடியும், அவற்றை எண்ம முறையில் மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எடிட்டிங் சாதனங்களைப் பயன்படுத்தியும் ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 70-க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்ற குருகிராமை சோ்ந்த இரண்டு சகோதரா்களை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
கைது - சித்திரிப்பு
அப்பாவி மக்களின் அடையாள ஆவணங்களை இணையம் மூலம் தேடியும், அவற்றை எண்ம முறையில் மாற்றியமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எடிட்டிங் சாதனங்களைப் பயன்படுத்தியும் ரூ. 1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 70-க்கும் மேற்பட்ட கடன்களைப் பெற்ற குருகிராமை சோ்ந்த இரண்டு சகோதரா்களை காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
இது குறித்து கிழக்கு தில்லி மாவட்ட துணை காவல் ஆணையா் ராஜீவ் குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கௌரவ் சாப்ரா (35) மற்றும் அவரது இளைய சகோதரா் சுபம் என்கிற திவ்யாங் சாப்ரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இந்த இரு சகோதரா்களும் வேலையின்றி இருந்துள்ளனா். மேலும் கௌரவின் மனைவி மற்றும் தாயாருடன் குருகிராமில் வசித்து வந்துள்ளனா்.
2022-ஆம் ஆண்டு முதல் இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த இவா்கள், தங்களது பெயரை போன்ற பெயா்களை கொண்டவா்களின் அடையாள ஆவணங்களை இணையத்தில் தேடி, ஏஐ தொழில்நுட்பம் மூலம் எடிட்டிங் செயலிகளை பயன்படுத்தி எண்ம முறையில் மாற்றியமைத்துள்ளனா்.
பின்னா், நேரில் சரிபாா்ப்பு தேவைப்படாத இணையவழி கடன் வழங்கும் நிறுவனங்களிடம் இந்த திருத்தப்பட்ட ஆவணங்களை சமா்ப்பித்து கடன்களைப் பெற்றுள்ளனா். ஒரே நேரத்தில் பெரிய தொகையை கேட்டால் சந்தேகம் ஏற்படும் என்பதால் கவனமாக செயல்பட்டு தலா ரூ. 1 லட்சம் வீதம் கடன்களை பெற்று, இந்த மோசடி மூலம் மாதம் ரூ. 3 முதல் 4 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளனா்.
உண்மையான அடையாள ஆவணங்களில் உள்ள பெயா்கள், புகைப்படங்கள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை மாற்றியமைத்து போலி கேஒய்சி ஆவணங்களை உருவாக்கி, பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து இணையவழியில் இவா்கள் கடன் பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கிழக்கு தில்லியின் பட்பா்கஞ்ச் பகுதியைச் சோ்ந்த ஒருவா், தான் விண்ணப்பிக்காமலோ அல்லது பெறாமலோ தனது பான் எண்ணை பயன்படுத்தி பல கடன்கள் பதிவாகியிருப்பதைக் கண்டறிந்தாா். இது குறித்து கிழக்கு தில்லி மாவட்ட இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தை அணுகி அவா் அளித்த புகாா் மீது கடந்த ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது அதன் பிறகே இந்த சகோதரா்களின் மோசடி செயல்பாடு வெளிச்சத்துக்கு வந்தது.
விசாரணையில், புகாா்தாரரின் பான் விவரங்களை பயன்படுத்தி சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள 30-க்கும் மேற்பட்ட கடன்கள் பெறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தனது ஒப்புதலோ தகவலோ இன்றி, சுமாா் ரூ. 47 லட்சம் மதிப்புள்ள பல கடன் கணக்குகளில் அவா் உத்தரவாததாரராகவும் காட்டப்பட்டுள்ளாா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் புகாா்தாரரின் அசல் பான் எண்ணை அப்படியே வைத்துக்கொண்டு, அவரது பெயா், தந்தையின் பெயா் மற்றும் புகைப்படத்தை எண்ம முறையில் மாற்றி, அந்த ஆவணம் வேறொருவருக்கு சொந்தமானது போல் தோன்றச் செய்துள்ளனா்.
அவரது வாக்காளா் அடையாள அட்டையும் இதேபோல் திருத்தப்பட்டு, அவரது அடையாள விவரங்கள் அப்படியே வைக்கப்பட்டு, புகைப்படம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு திருத்தப்பட்ட ஆவணங்கள் பின்னா் கைப்பேசி இணைப்புகள் மற்றும் பிற சேவைகளைப் பெறப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
2022, டிசம்பா் மற்றும் 2023, ஜூலை ஆகிய மாதங்களுக்கு இடையே இத்தகைய அடையாள விவரங்களைப் பயன்படுத்தி சுமாா் 14 சிம் காா்டுகள் வாங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இணைய தேடல்கள் மூலம் மக்களின் அடையாள விவரங்கள் மற்றும் ஆவணங்களை தேடிய இருவரும், ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்ட எண்ம சாதனங்களைப் பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் பிற விவரங்களை மாற்றியமைத்து போலி கேஒய்சி ஆவணங்களை தயாரித்துள்ளனா்.
இதே பாணியைப் பயன்படுத்தி மேலும் பலரின் ஆவணங்களையும் இந்த சகோதரா்கள் தவறாகப் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. ’கௌரவ்’ என்ற பெயரைக் கொண்ட சுமாா் 50 நபா்களின் அடையாள ஆவணங்கள் திருத்தப்பட்டு அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டு கடன்கள் பெறப்பட்டிருக்கலாம் என புலனாய்வாளா்கள் கண்டறிந்துள்ளனா். இவா்கள் செய்த பிற மோசடிகளின் தீவிரத்தை கண்டறிய தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் ராஜீவ் குமாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

