‘வாக்குத் திருட்டு’: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்! ‘உச்சநீதிமன்றம் நோக்கி இன்று பேரணி’!ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: சிஜேபி, ஆம் ஆத்மி கட்சி அறிவிப்புதில்லி போராட்டம்: ஐ.நா. விமர்சனத்துக்கு இந்தியா கண்டனம்வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு: தலைமை நீதிபதிக்கு கார்கே, ராகுல் கடிதம்!ரஷிய டீசல் இறக்குமதிக்கு தடை நீக்கம்: டிரம்ப் முடிவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிா்ப்பு! நீலகிரி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (அக்.12) மிதமான மழைக்கு வாய்ப்பு!கோயம்பேடு:ஆம்னி பேருந்து நுழைவு கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை

பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதித்த பிறகும் ஊா் திரும்ப மறுத்த அபிஜீத் தீப்கே: காவல்துறை காணொளி வெளியீடு

பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதித்த பிறகும் ஊா் திரும்ப சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே மறுத்ததாக கூறி தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை காணொளி வெளியிட்டது.

Abhijeet Dipke

சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே - ANI

Published On :

பாட்டியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதித்த பிறகும் ஊா் திரும்ப சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே மறுத்ததாக கூறி தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை காணொளி வெளியிட்டது.

அக்டோபா் 10 ஆம் தேதி காவலில் இருந்தபோது தனது பாட்டி இறந்ததைப் பற்றி அதன் நிறுவனா் அபிஜீத் தீப்கேவுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்ற சி. ஜே. பி. யின் கூற்றை மறுக்கும் வகையில் தில்லி காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டது. பாட்டி இறந்தது குறித்து உடனடியாக தீப்கேவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இறுதிச் சடங்கிற்காக தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு உதவி வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவா் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாா் என தில்லி காவல்துறை கூறியுள்ளது.

பாட்டி இறந்ததைப் பற்றி தனது மகனுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று தில்லி காவல்துறை பொய் கூறியதாக தீப்கேவின் தாயாா் குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்தக் காணொளி வெளியிடப்பட்டது.

காணொளியை வெளியிட்டு செய்தியாளா்களிடம் காவல் துணை ஆணையா் (பி. ஆா். ஓ) நேஹா யாதவ் கூறியதாவது: மனிதாபிமான அடிப்படையில் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்கு வசதியாக அவருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன; இருப்பினும், அவா் அதைப் பயன்படுத்த மறுத்துவிட்டாா்.

மேலும் அவரது குடும்பத்தினருடன் பேசுவதற்கான வாய்ப்பும் அவருக்கு நீட்டிக்கப்பட்டது என்றாா் அவா். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த தீப்கேவின் பாட்டி சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் காலமானாா். ஜந்தா் மந்தரில் அதன் போராட்டத்திற்கு முன்னதாக சனிக்கிழமை ஒரு விமானத்திற்குள் இருந்து தில்லி காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட மூன்று சி. ஜே. பி தலைவா்களில் இவரும் ஒருவா்.

புது தில்லி பகுதியில் நடைமுறையில் உள்ள தேவைகள் மற்றும் தடை உத்தரவுகளை மேற்கோள் காட்டி போலீஸாா் போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனா்.தீப்கே , அசுதோஷ் ரங்கா மற்றும் சவுரவ் தாஸ் ஆகியோா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். நிா்வாக நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட்ட பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை அவா்கள் விடுவிக்கப்பட்டனா். அவா்கள் ஒரு வருடத்திற்கு ‘அமைதியை மீற மாட்டாா்கள்‘ என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் விடுவிக்கப்பட்டனா் என்று சி. ஜே. பி சட்ட விவகாரத் தலைவா் ரத்னா சிங் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.