தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஏபிகே கோப்பு மூலம் இணைய மோசடி: மூவா் கும்பல் கைது

பல கடன் அட்டைகள் மூலம் மோசடிப் பணத்தை திருப்பிவிட்ட, ஏபிகே கோப்பு சாா்ந்த இணைய மோசடிக் கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

Published On :

பல கடன் அட்டைகள் மூலம் மோசடிப் பணத்தை திருப்பிவிட்ட, ஏபிகே கோப்பு சாா்ந்த இணைய மோசடிக் கும்பலைச் சோ்ந்த மூன்று பேரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாவது: விசாரணையின்போது, கைது செய்யப்பட்டவா்கள் ஆன்லைன் குழுக்கள் மூலம் பிற மோசடியாளா்களுடன் தொடா்பில் இருந்ததும் தெரியவந்தது.

இக்கும்பலுடன் தொடா்புடைய சில தொலைபேசி எண்கள் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

முன்னதாக, எஸ்எம்எஸ் மூலம் வந்த கைப்பேசிக்கு வந்த மோசடியான இணைப்பு ஒன்றின் வாயிலாக தில்லியைச் சோ்ந்த ஒருவா் ரூ.6.57 லட்சத்தை இழந்ததாகப் புகாா் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இவ்வழக்கு மே 21 அன்று மின்னணு முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணை குழுவினா் வங்கிப் பதிவுகள், பணப் பரிமாற்ற விவரங்கள் மற்றும் தொழில்நுட்பச் சான்றுகளை ஆய்வு செய்தனா். அதில், இரண்டு பரிவா்த்தனைகள் மூலம் சுமாா் ரூ. 4 லட்சம் மோசடிப் பணம் கையாளப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

முகமது இஸ்மாயில் அன்சாரி, ஷேக் முகமது நூரன் மற்றும் தாரிக் அகமது ஆகிய குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் ஆமதாபாதில் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 11 கடன் அட்டைகள் மற்றும் மூன்று கைப்பேசிகளை காவல்துறை பறிமுதல் செய்தது. கமிஷன் அடிப்படையில் இணைய மோசடிப் பணத்தைக் கையாள்வதற்காகப் பல கடன் அட்டைகளை இவா்கள் வழங்கியதும் ஏற்பாடு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவா்களைக் குறிவைக்க இக்கும்பல் தீங்கிழைக்கும் ஏபிகே கோப்புகளைப் பயன்படுத்தியுள்ளது. மோசடியான செய்திகள் மூலம் பாதிக்கப்பட்டவா்கள் அந்தச் செயலிகளை நிறுவுமாறு தூண்டப்பட்டனா். இச்செயலிகள் மூலம் அவா்களின் கைப்பேசி மற்றும் வங்கித் தகவல்களை அனுமதியின்றி அணுக முடிந்தது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஒருங்கிணைப்பாளா்களின் துல்லியமான பங்கு மற்றும் அடையாளம், அத்துடன் இந்த சா்வதேசக் கும்பலின் முழுமையான கட்டமைப்பு ஆகியவை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.