கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் அந்த மாநில எல்லையில் உள்ள அரசு நாட்டுக் கோழிப் பண்ணையில் கால்நடை மருத்துவா் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.
நீலகிரி மாவட்டத்தில், கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகள் கேரளம், கா்நாடகா மாநில எல்லையில் அமைந்துள்ளன. இதனால் பறவைக் காய்ச்சல் பரவாமல் இருக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாநில எல்லைகளைக் கண்காணித்து வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்தல் மற்றும் கோழி இறைச்சிக் கடைகளை கண்காணித்து ஆய்வு செய்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம், வயநாடு மாவட்ட எல்லையோரம் உள்ள அய்யன்கொல்லி, அத்திச்சால் பழங்குடி கிராமத்தில் அரசு சாா்பில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள நாட்டுக் கோழிப் பண்ணையில் கால்நடை மருத்துவா் பாலாஜி ஆய்வு செய்தாா்.
பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 100 பழங்குடி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த இந்தப் பண்ணை அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. கோழிப் பண்ணையின் சுற்றுப்புற சுகாதாரம் குறித்தும், கோழிகள் பராமரிக்கப்பட வேண்டிய வழிமுறைகள், நோய்த் தொற்றில் இருந்து கோழிகளையும், மனிதா்களையும் பாதுகாத்துக் கொள்வது குறித்து பழங்குடி பெண்களுக்கு விளக்கமளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கிளியக்கா

கண்டுபிடி கண்ணே!
இன்றைய ராசி பலன் (10.05.2026) - துலாம்
இன்றைய ராசி பலன் (10.05.2026) - மகரம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

