சுடச்சுட

  

  பாகிஸ்தான்காரன் வந்து குண்டு போட்டான்னாக்க அவனுக்கு 1000 ரூபாய் கொடுப்பேன் நான்!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 09th January 2019 12:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gandhi_PA

   

  இப்படிச் சொல்வது யார் தெரியுமா?

  மகாத்மா காந்தியின் தனிச்செயலராக 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பெரியவர் வி.கல்யாணம் அவர்கள் தான். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் என்கிறீர்களா?

  காரணம் இல்லையா என்ன? காந்தியுடன் அருகிருந்து அவரது எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவருக்கு இன்றைய அரசியல்வாதிகளின் பகட்டும் படாடோபமும் கண்டால் இப்படித்தான் சொல்லத் தோன்றும். காந்தி பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று நாம் பலவகைகளில் துஷ்பிரயோகம் செய்து வருகிறோம் என்பது உண்மையான காந்தியவாதிகளின் ஆதங்கமாக இருக்கிறது. அந்தக் கோபத்திலும், மன வருத்தத்திலும் தான் அவர் மேற்கண்ட வாசகங்களைச் சொல்கிறார். பிழை அவரது சொற்களில் இல்லை... அவரை அப்படிச் சொல்ல வைத்த நமது அரசுகளின் மேல் தான் இருக்கிறது.

  வெங்கிட்ட கல்யாணம் எனும் வி. கல்யாணம் அவர்கள் மகாத்மா மறைந்தபின் எந்த அரசியல் ஆளுமைகளுடனும் இணைய விருப்பமின்றி காமராஜர் காலத்தில் பல்வேறு துறைகளின் கீழ் அரசு உயரதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றதன் பின் பென்சன் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். அத்துடன் மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றி எவர் உதவியும் இன்றி 97 வயதிலும் தன் வேலைகளைத் தானே செய்து கொண்டு தனித்து வாழ்ந்து வருகிறார். அவருடனான நேர்காணலுக்கான முன்னோட்டம் இது...

   

  முழுமையான நேர்காணல் வெள்ளியன்று (11.1.2019) வெளியிடப்படும்.

  காந்தியைக் கொண்டாடுவதைக் காட்டிலும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து காட்டுவதே உண்மையான காந்தியப் பற்று என்கிறார் பெரியவர் வி.கல்யாணம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai