முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சிறிய ரோஜாக்கள் பெரிய சாதனைகள்

சிறிய ரோஜாக்கள் பெரிய சாதனைகள் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.120; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.

News image
Updated On :11 டிசம்பர் 2016, 6:53 pm

ஆர்.எஸ். நாரா​ய​ணன்

சிறிய ரோஜாக்கள் பெரிய சாதனைகள் - ஆர்.எஸ்.நாராயணன்; பக்.142; ரூ.120; யுனிகியூ மீடியா இன்டெகரேட்டர்ஸ், சென்னை-109; )044 - 2825 0519.
2012 - 2014 காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி ஆகியவற்றில் வெளிவந்த கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இந்நூல்.
விவசாயிகளும், சாதாரண மக்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் எழுதப்பட்ட இக்கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் எல்லாம் நம்நாட்டின் சுய பொருளாதாரத்தை மேம்படுத்துவதைப் பற்றியே பேசுகின்றன.
விவசாயம் மேம்பட வேண்டும்; குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அழிந்துவிடக் கூடாது; "நமது பொருளாதார வளர்ச்சியில் போதகர்களாக அந்நிய முதலீட்டாளர்களை நியமித்து நாம் எதை உண்ண வேண்டும்? எந்தச் சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்? எப்படிப் படிக்க வேண்டும்? எப்படி உடுத்த வேண்டும்? என்று நமக்குச் சொல்லித் தரும் அளவுக்கு இடம் கொடுத்து நமது சிந்தனா சக்தியை இழந்துவிடக் கூடாது'; பட்ஜெட் பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்காக பொதுத்துறை நிறுவனங்களின் பங்கை விற்கக் கூடாது; தொழில் உற்பத்தி, வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, இவற்றில் கவனம் செலுத்தாமல் கடை விரித்து எலைட் அங்காடிகளைப் பெருக்குவதால் இந்தியப் பொருளாதாரம் சீரடையாது; மதுவிலக்கைக் கொண்டு வர வேண்டும், மதுவை மையமாக வைக்காமல் வேறு வழியில் மாநில வருமானத்தை உயர்த்தத் திட்டமிட வேண்டும் என்பன உள்ளிட்ட அற்புதமான கருத்துகள் நிறைந்துள்ள இந்நூல், சமூக அக்கறை உள்ள அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஒன்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.