வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல்

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல் - க.பழனித்துரை; பக்.112; ரூ.50; தமிழ்நாடு சர்வோதய மண்டல், காந்தி மியூசியம் வளாகம், மதுரை-625020.

News image
Updated On :8 ஜூலை 2018, 7:05 pm

மக்களாட்சி மாண்புற மக்கள் அரசியல் - க.பழனித்துரை; பக்.112; ரூ.50; தமிழ்நாடு சர்வோதய மண்டல், காந்தி மியூசியம் வளாகம், மதுரை-625020.
மக்களாட்சியில் மன்னராகக் கருதப்பட வேண்டிய மக்கள், வாக்குக்குப் பணம் பெறுபவராகவும், குறைகளைத் தீர்க்க மனு போடுபவராகவும் ஆகிவிட்டனர். அரசியல் கட்சிகளில் உள்கட்சி ஜனநாயகம் என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது. இந்தச் சூழலில் ஆட்சி, ஆளுகை, நிர்வாகம், மக்கள் நலன் இவை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 
இந்நூலாசிரியர் அவ்வாறு சிந்தித்து எழுதிய பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஒவ்வொரு கட்டுரையிலும் கட்சிகளின் செயல்பாடு, ஆளுமைப் பண்பு, நிர்வாகத் திறன் போன்றவை விரிவாகப் பேசப்பட்டாலும், எல்லாக் கட்டுரைகளுக்கும் அடிநாதமாக மக்கள் நலன் என்பதே அமைந்துள்ளது. 
குறிப்பாக, "ஒரு நாட்டின் சிறப்பு என்பது அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியோ, கட்டமைப்பு வளர்ச்சியோ அல்ல. மாறாக அந்நாட்டு மக்கள் மானுடம் போற்றும்படி மரியாதையுடன் வாழ வழி செய்வதே' என்றும் ("மக்கள் அரசியலைக் கட்டமைக்க'), "இன்றைய அரசியலில் மக்களின் எதிர்காலம் குறித்தோ, இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது குறித்தோ, நீர் பற்றாக்குறை குறித்தோ, நலிந்துவரும் சட்டம் - ஒழுங்கு குறித்தோ விவாதிக்கப்படுவதில்லை. இவற்றையெல்லாம் வல்லுநர்களிடம் விட்டுவிட்டு பதவியைப் பிடிப்பது, அதைத் தக்க வைத்து அதன் மூலம் பணம் ஈட்டுவது, அந்தப் பணத்தின் மூலம் மீண்டும் பதவியைப் பிடிப்பது - இவையே அரசியல்வாதிகளின் கவலையாக இருக்கிறது' ("இன்றைய அரசியலின் தேக்கநிலை') என்று குறிப்பிட்டிருப்பதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியவை.
அரசியல் தொடர்புடையோர் மட்டுமின்றி நடுநிலை சிந்தனையாளர்கள், பொதுமக்கள் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.