இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

அமுதக்கனி

 மனதின் அடித்தளத்தில் ஒரு கதை தங்கி இருந்தால், அது தானாகவே  வெளிவரும்.  அது பூர்வ ஜன்மத்தை ஆராய்ந்து தெளிவதாகக் கூட இருக்கலாம். அதுபோன்ற அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறான் கதை நாயகன் அமர்நாத்.  

News image
Updated On :21 டிசம்பர் 2020, 3:19 am

DIN

அமுதக்கனி - மனோஜ்தாஸ்; தமிழில் : இளம்
பாரதி; பக்.288; ரூ.260; சாகித்ய அகாதெமி, சென்னை-18  )044 -2431 1741.
"சரஸ்வதி சம்மான்'  பரிசு பெற்ற ஒடியா மொழி நாவல். காவிய காலத்து நிகழ்வுகளையும், நடைமுறை காலத்து நிகழ்வுகளையும் ஒன்றிணைக்கும் யுக்தியில் உருவான படைப்பு. 
 மனதின் அடித்தளத்தில் ஒரு கதை தங்கி இருந்தால், அது தானாகவே  வெளிவரும்.  அது பூர்வ ஜன்மத்தை ஆராய்ந்து தெளிவதாகக் கூட இருக்கலாம். அதுபோன்ற அவஸ்தையில் சிக்கிக் கொள்கிறான் கதை நாயகன் அமர்நாத்.  
 கி.மு. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த உஜ்ஜயினியின் ராஜா பர்த்ருஹரி,  அவனது  இளையராணி சிந்துமதி, அமைச்சர் ஜயகாந்த் ஆகியோரும் நாவலில் பாத்திரங்களாக உலா வந்து கதையை நகர்த்திச் செல்கின்றனர். 
 அமர வாழ்வு தரும் கனி எப்படித் தடம் மாறி மாறி கதை மாந்தரிடையே பரஸ்பரம் கைமாறுகிறது என்பது சுவாரசியம்.  நிகழ்காலத்தில் போதை மருந்து எப்படி இடம் மாறுகிறது என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது.  சிந்துமதியின் உயிரைக் காக்க  பர்த்ருஹரி அமுதக் கனியை  கொண்டு வருவதற்குள் அவள் இறந்துவிடுகிறாள். போதை மருந்துக்கு அடிமையான அமர்நாத்தின்  மகள் சாவிலிருந்து  மீண்டு  உணர்வு திரும்புகிறாள்.
 இது வரலாற்று நாவல் அல்ல.  உணர்வு சார்ந்த படைப்பு. கடந்த காலம், நிகழ்காலம் என ஒருசேர சேர்ந்த இந்த புதினத்தில் கதை மாந்தர்களின் பேச்சு
முறையும் கால வேறுபாட்டுக்குத் தக்கவாறு அமைந்திருப்பது சிறப்பு.  தற்கால பரபரப்பான நகர வாழ்வுச் சூழலையும் ராஜா பர்த்ருஹரி காலத்து அரசியல் சூழ்நிலையையும் இணைத்து வடிவமைத்துள்ளார் கதாசிரியர். 
 ஆழ்ந்த  வாசிப்பு தேவைப்படும் நாவலை, தொய்வு ஏற்படாத வகையில்  மொழிபெயர்த்திருக்கிறார் இளம் பாரதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.