இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பேய்க்கரும்பு

பேய்க்கரும்பு - அபிராஜ ராஜேந்திர மிச்ரா - தமிழில்: அலமேலு கிருஷ்ணன்; பக்.96; ரூ.115; சாகித்ய அகாதெமி, சென்னை - 18; )044-2431 1741.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 3:34 am

DIN

பேய்க்கரும்பு - அபிராஜ ராஜேந்திர மிச்ரா - தமிழில்: அலமேலு கிருஷ்ணன்; பக்.96; ரூ.115; சாகித்ய அகாதெமி, சென்னை - 18; )044-2431 1741.
 அபிராஜ ராஜேந்திர மிச்ரா - சமஸ்கிருத மொழி வல்லுநர். இவரின் "இஷுசுந்தா' - சம்ஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட எட்டுச் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. 1988-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறது. அந்த நூலே "பேய்க்கரும்பு' என்ற பெயரில் தமிழாக்கம் பெற்றிருக்கிறது.
 இவரது கதைகளில் பெரும்பாலும் பெண்களின் பலவீனம் கருப்பொருளாகி இருக்கிறது. கதைகளின் ஊடே பழமொழிகள், உவமைகள், நீதிக்கதைகள் விரவிக் கிடக்கின்றன.
 "பேய்க்கரும்பு' சிறுகதை நிறைவேறாத காதலைச் சொல்கிறது. விந்திய மலைப் பகுதியின் கிராமியத்தையும், அதன் மக்களையும் படம் பிடிக்கிறது. தனக்குக் கீழ் வேலை செய்யும் வேலைக்காரனது மனைவியின் அழகு குறித்து கதாநாயகனின் மனைவி விவரிக்கும்போது அக்கறை காட்டாத கதாநாயகன், அவள் தன் பால்யகால சிநேகிதி என்று அறியும்போது அதிர்ச்சி அடைகிறான். முடிவில் சிநேகிதியின் மகளையே தனக்கு மருமகளாக்க ஒப்புதல் அளிக்கிறான். ஏழை - பணக்காரன் என்கிற இடைவெளி அதிகம் பேசப்படுகிற கதை.
 "வாழ வேண்டும் என்ற ஆசை'யில் வரும் நாயகி தபதி குடும்பத்தைக் காப்பாற்ற தனது இளமையைப் பலியாக்குவது, "ஒரு வயதுப் பெண் குழந்தை' கதையின் நாயகி விமலா, காதலில் தோல்வியுற்று - வேறு ஒருவனுக்கு மணமாகிப் பெற்ற குழந்தையை வெறுப்பது என வாழ்வின் யதார்த்தங்கள் பதிவாகியுள்ளன.
 "" இதிலுள்ள பெரும்பாலான கதைகள் இன்று வரையிலான மனித உளவியலையும், நவீன பண்பாட்டு அமைப்பு முறையையும் வெளிப்படுத்துகின்றன - என்று ஆசிரியர் அபிராஜ ராஜேந்திர மிச்ரா தனது முன்னுரையில் கூறியிருப்பது உண்மையே.
 இவரது கதைகளின் கரு, சமூகப் பிரச்னைகளை, குறிப்பாகப் பெண்கள், கைம்பெண்கள், கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் சார்ந்தே இருக்கின்றது. சிறந்த சிறுகதைகள் கொண்ட தொகுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.