மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது...-சின்னப்பா கணேசன்; பக். 368; ரூ. 350; சோழன் பதிப்பகம், சென்னை- 100; 90923 45641, 97899 65475.
பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு உலக அளவில் விரிவடைந்தாலும் தமிழகத்தில் செல்லுபடி ஆகாமல் இருக்கிறது. அது ஏன் என்ற கேள்விக்குப் பதில்தான் இந்த நூல்.
தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் எதிர்ப்பு, மாய பிம்பம் என்று கூறும் நூலாசிரியர், தமிழகத்துக்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தை நூல் முழுவதிலும் விளக்கி இருக்கிறார்.
சிறிய பத்திகளுடன் கூடிய எளிய எழுத்துநடை, கோவையான சித்திரிப்புகள், கவனமாக அளிக்கப்பட்டுள்ள அடிப்படைத் தரவுகள், படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள், இவை அனைத்தையும் லாகவமாகக் கட்டுரையில் இணைத்திருக்கும் பாங்கு, நல்ல அச்சுப் பதிப்பு என இந்நூலின் சிறப்புகளைப் பட்டியலிடலாம்.
பாஜகவினரே அறியாத பல புள்ளிவிவரங்களை ஒரே நூலில் 27 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தேசிய அளவில் இரண்டாமிடம் வகிப்பது தமிழகம்; சென்ற ஆண்டு வழங்கப்பட்ட நூறு பத்ம விருதுகளில் தமிழர்கள் பெற்றவை 12; சென்ற நிதியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ. 8 லட்சம் கோடி;
பிரதமரின் விவசாய கெளரவ நிதி பெறுவோரில் 37 லட்சம் பேர் தமிழக விவசாயிகள் - இதுபோன்ற தகவல்கள் பலர் அறியாதவை.
இந்த நூல் பாஜக உறுப்பினர்களுக்குக் கையேடாகவும், அதனை எதிர்க்கும் பிற கட்சியினருக்கு சுய பரிசோதனை செய்யப் பயன்படும் ஆய்வேடாகவும் விளங்குகிறது. மொத்தத்தில் அரசியல் ஆர்வலர்கள் அறிய வேண்டிய விஷயங்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...





