உப்பா புட்டுக்கடை (நாவல்) - அழகு மித்ரன்; பக்.244; ரூ.240; சாய் கம்யூனிகேஷன்ஸ், நாகர்கோவில்; 94867 17927.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான நூலாசிரியர் தமது வட்டார வழக்கு மொழியில் எழுதியுள்ள நாவல்.
காதலித்து மணம் முடித்தவன் இறந்துபோக குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்கும் பாத்துமா - உப்பா குடும்பம். பானு, இஸ்மாயில், ஈராளன், சுஜித்ரா, அடிக்கடி வம்பு பேச கடைக்கு வந்து போகும் மீரான் என எல்லா கதாபாத்திரங்களும் நடைமுறை வாழ்வில் சந்திக்கும் மனிதர்களை நினைவூட்டுகிறார்கள்.
கற்றாழை நாரில் கூடை பின்னும் தொழில் பெண்களின் சுய முன்னேற்றம் குறித்து விளக்குகிறது. முத்துவின் விருப்பம் சாயிரா மீதுதான் என்பதை அறிந்த அவனுடைய பெற்றோர் தடுக்க, இறுதியில் சாயிராவை மணந்து எம்மதமும் சம்மதம் என்று அவரவர் சடங்கு, சம்பிரதாயத்தைப் பின்பற்றி வாழ்வது அழகு.
பூஜையறையில் சுவாமி படங்களுடன் உப்பா படம் இடம்பெறுவது அருமையான காட்சி. அன்பு நிறைந்த சமூக வெளியில் மிருக இயல்பு மாறாத சிலரால் பலரின் வாழ்வு சிதைவதை நம்முன் எடுத்து வைக்கிறார் நாவலாசிரியர்.
உயிரோட்டத்துடன் கதாபாத்திரங்களைப் பேசவைத்து, கதை சொல்லியிருக்கிறார்.
மலையாளக்கரையோரம் உலவிவிட்டு வந்த அனுபவத்தைத் தரும் நாவல், மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துணை முதல்வர் பதவி? நிதீஷ் குமாரின் மகன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார்!

பெட்ரோலுக்காக குவியும் வாகனங்கள்! போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நிரப்ப வரிசை கட்டிய மக்கள்!
பிரபலம் என்பது யார்? விஜய்யைச் சொல்கிறாரா? - கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரல்!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

