தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனியமயமாக்கமும்  அதன் சமூகத் தாக்கமும்

News image
Updated On :12 டிசம்பர் 2022, 8:24 am

DIN

சிப்பாய்களும் போர்களும்: தமிழகத்தில் காலனியமயமாக்கமும்  அதன் சமூகத் தாக்கமும் - எஸ். ஜெயசீல ஸ்டீபன் (தமிழில் - கி. இளங்கோவன்);  பக். 200; ரூ. 250, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; 044 - 26251968.

'தமிழ் மக்கள் வரலாறு' நூல் வரிசையில் வெளிவந்துள்ள இந்த நூல், தமிழகத்தில் கி.பி. 1565-இல் தொடங்கி ஏறத்தாழ மூன்று  நூற்றாண்டுகளில் நடைபெற்ற போர்களைப் பற்றியும் அவற்றின் தாக்கம் பற்றியும் விவரிக்கிறது.

தலையாலங்கானத்துப் போரிலிருந்து, தமிழக வரலாற்றின் முக்கியமான போர்களைப் பற்றிச் சுருக்கமாக முன்னுரையிலேயே அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர்.  தவிர, தமிழ் இலக்கியங்கள் காட்டும் போர்களைப் பற்றிக் குறிப்பிடுவதுடன், கல்வெட்டுச் சான்றுகளுடன்  போர்க்களக் காட்சிகளையும்  யானைகள், குதிரைகள் பயன்பாடு பற்றியும் 
விவரிக்கிறார்.

தமிழகத்தில் உள்நாட்டு ஆட்சியாளர்களின் போர்ப் படைகள் பற்றிக்  கூறும்போது, விஜயநகர, தஞ்சாவூர் நாயக்கர்கள்,  மராட்டிய ஆட்சியாளர்கள், ஆற்காடு நவாப் படைகள் பற்றிய தகவல்களுடன் ஆங்கிலேயப் படைகளும் பாளையக்காரர்களின் சண்டைகளும் பற்றியும் விவரிக்கப்படுகின்றன.

பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனத்தால் படைகளில் உள்ளூர்காரர்கள் நியமிக்கப்பட்டது பற்றிய இயலில் ஏராளமான தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.  புதுச்சேரியில் ஆங்கிலேயர்களால் இடிக்காமல் விடப்பட்ட ஒரேயொரு பொதுக்கட்டடம் வெடிமருந்துத் தொழிற்சாலை மட்டுமே என்ற குறிப்பு கவனத்துக்குரியது.

சென்னையில் ஆங்கிலேயப் படைக்கு உள்ளூர்காரர்களை - தாழ்த்தப்பட்டவர்களை அமர்த்தியது, தொடர்ச்சியாக சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட விளைவுகள்  விளக்கப்படுகின்றன. தவிர, மணிலா படையெடுப்பு (1762) பற்றிய தகவல்களும் தனியொரு நூலாக எழுதத் தகுந்தவை.

விடுதலைப் போரின் தொடக்கம் 1857 என்று சொல்லப்படுவதற்கு முன்னரே, 1806 -ஆம் ஆண்டிலேயே வேலூரில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சி தோன்றவும் தோல்வியுறவும் காரணமாக இருந்தவற்றுடன், அந்தத் தோல்விக்குப் பிறகு ஆங்கிலேயப் படையின் தொடர் நடவடிக்கைகளும் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. படிக்க உகந்த ஆவண நூல்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.