பாரதி பாமாலை - முனைவர் நயம்பு. அறிவுடை நம்பி; பக். 172; ரூ.150; வனிதா பதிப்பகம், 11 நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 17.
பாரதியார் குறித்து பாரதிதாசன், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அப்துல் ரகுமான், கண்ணதாசன், சுரதா, வாலி, வைரமுத்து உள்ளிட்ட 69 தமிழ் ஆளுமைகள் எழுதிய பாமாலைகளின் தொகுப்பு இது.
காந்தியடிகள், கருணாநிதி, வலம்புரி ஜான், ஜீவானந்தம் உள்ளிட்டோர் தெரிவித்த கருத்துகளும் இடம்பெற்றுள்ளன.
'திருவல்லிக்கேணி யானை தின்றுவிட்ட தமிழ்க் கரும்பு' என்று மகாகவி குறித்து கவிஞர் வாலி பதிவு செய்துள்ளது கவிதைக்கு அழகு சேர்க்கிறதே தவிர உண்மை அதுவல்ல.
திருவல்லிக்கேணி யானை சம்பவம் 1921 ஜூன் மாதம் நிகழ்ந்தது. விரைவில் அதிலிருந்து மீண்ட பாரதியார் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் 'சுதேசமித்திரன்' அலுவலகத்துக்கு வேலைக்குச் சென்று வந்தார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியூர் பயணமும் மேற்கொண்டுள்ளார். ஆகவே, யானை இடறியதால் பாரதியார் மரணமடையவில்லை என்பது தெளிவாகிறது.
'உன் எழுத்து இந்தப் பிரபஞ்சத்தின் பிழிவு' என்ற கவிஞர் வைரமுத்துவின் கூற்றுக்கு இந்நூல் வலு சேர்க்கிறது.
'பாரதியை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைக் கவனித்துக் கொள்ள தமிழ்நாட்டில் யாரும் இல்லையா?' என்று மகாத்மா காந்தி; 'பாரதியார் தமிழ்நாட்டில் திரு அவதாரம் செய்தது தமிழர்களுக்குக் கிடைத்த பாக்கியமாகும்' என்று ராஜாஜி; 'தமிழ் மொழியில் ஒரு புதிய பரம்பரையையே பாரதி தோற்றுவித்து நிறுவிவிட்டான் என ஜீவா உள்ளிட்டோர் போற்றியுள்ளதையும் பதிவு செய்துள்ளது.
பல்வேறு அறிஞர்கள், ஆளுமைகள் பதிவு செய்துள்ள கருத்துகளை இந்த ஒரே நூல் மூலம் அறிந்துகொள்ள முடிவது நூலாசிரியரின் ஆய்வுத் திறனுக்கும் அயராத உழைப்புக்கும் சான்று பகர்கிறது. இந்நூல் எட்டயபுரத்தில் வெளியிடப்பட்டது மகாகவிக்கு பாமாலை சூட்டியது போல அமைந்துள்ளது. தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துணை முதல்வர் பதவி? நிதீஷ் குமாரின் மகன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார்!

பெட்ரோலுக்காக குவியும் வாகனங்கள்! போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நிரப்ப வரிசை கட்டிய மக்கள்!
பிரபலம் என்பது யார்? விஜய்யைச் சொல்கிறாரா? - கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரல்!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

