முதியோர் நலம் - முதுமையை முழுமையாக அனுபவிக்க...; பத்மஸ்ரீ டாக்டர் வி.எஸ்.நடராஜன்; பக். 255; ரூ. 250; டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை; சென்னை-10.
முதியோர் சந்திக்கும் குடும்பப் பிரச்னைகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. முதுமையில் ஏற்படும் நோய்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளையும் தெரிந்து கொண்டு, அவற்றைத் தடுத்து நலமாக வாழ உதவுவதும், முதியோர் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் பிறந்ததுதான் முதியோர் நலம் எனும் இந்த நூல் என நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
முதுமை ஏற்படக் காரணங்கள், முதுமை எப்போது ஆரம்பிக்கிறது?, முதுமையின் முதல் அறிகுறி என்ன?, முதுமையில் மறைந்திருக்கும் நோய்கள், குறைவாகச் சாப்பிட்டு நீண்ட காலம் வாழலாம், இறுதி மாதவிடாய், பெண்களுக்கு முதுமையில் ஏற்படும் நீர்க்கசிவு, உடல் தானம், இறப்பும்-ஏற்பும் என மொத்தம் 37 தலைப்புகளில் பயனுள்ள முதியோர் நலத் தகவல்கள் இந்த நூலில் விரிவாக இடம் பெற்றுள்ளன.
மரணம் குறித்து அறியாமலேயே மரணம் அடைவோர் பாக்கியசாலிகள். 'காலா உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன், எந்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்' என்று மகாகவி பாரதியார் பாடினார். அதை அடிக்கடி நினைவில் வைத்துக் கொண்டால் மரண பயம் வராது என்கிறார் நூல் ஆசிரியர் டாக்டர் வி.எஸ்.நடராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துணை முதல்வர் பதவி? நிதீஷ் குமாரின் மகன் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைகிறார்!

பெட்ரோலுக்காக குவியும் வாகனங்கள்! போர்ப் பதற்றத்தால் எரிபொருள் நிரப்ப வரிசை கட்டிய மக்கள்!
பிரபலம் என்பது யார்? விஜய்யைச் சொல்கிறாரா? - கிருத்திகா உதயநிதியின் பதிவு வைரல்!

நைஜீரியாவில் தொடரும் அவலம்! ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேர் கடத்தல்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

