இயக்குநர் மணிவண்ணனும் நானும் - கே. ஜீவபாரதி; பக். 268; ரூ.399; நம் பதிப்பகம், சாலிகிராமம், சென்னை-600 093; ✆95661 10745.
கவிஞர், பொதுவுடைமைச் சிந்தனையாளர், பேச்சாளர் எனப் பன்முகங்கள் கொண்ட நூலாசிரியர், திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை கட்டுரைகளாக்கி, அமரர் மணிவண்ணனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இயக்குநர் மணிவண்ணனுக்கும் தனக்குமான நட்பு, பயணங்களின்போது அவர் பரிமாறிக்கொண்ட கருத்துகள், திரையுலக சம்பவங்கள், சவால்கள் இந்த நூலில் காட்சிகளாக விரிகின்றன.
உதவி இயக்குநராக மணிவண்ணனிடம் சேர்ந்தது முதல் இறுதி வரை அவருடன் பயணித்தது குறித்த அனுபவங்களை 19 அத்தியாயங்களில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். ஆரம்பம் முதல் மணிவண்ணனுடன் பணிபுரிந்த உதவி இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் யார் யார் என்று தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவுகிறது.
மணிவண்ணனின் வசனங்களை தனது வசன உச்சரிப்பாலும், உடல்மொழியாலும் மெருகேற்றியவர் நடிகர் சத்யராஜ். மணிவண்ணன் இயக்கி, சத்யராஜ் நடித்த 'பாலைவன ரோஜாக்கள்', 'விடிஞ்சா கல்யாணம்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் 1986-இல் ஒரே நாளில் திரைக்கு வந்து, இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தது திரையுலக சாதனையாகும்.
இந்த இரண்டு படத்திலுமே ஜீவபாரதி உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். இந்நூலில், திரையுலகத்தினர் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய இருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடல் சூட்டைக் குறைக்குமா தக்காளி?

இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் கொடைக்கானல் சூரிய ஆய்வகத்தில் பாதுகாவலர், ஆபரேட்டா் பணி!

மதுரோவின் கடத்தலுக்குப் பிறகு! முதல்முறையாக வெனிசுவேலா சென்றார் கொலம்பியா அதிபர்!

தன்னம்பிக்கை அளித்த தினேஷ் கார்த்திக்..! மனம் திறந்த தேவ்தத் படிக்கல்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

