திரைப்படம் என்னும் சுவாசம் (திரைப்படக் கட்டுரைகள்) - சுப்ரபாரதிமணியன்; பக்.352; ரூ.380; காவ்யா, சென்னை -24; 044-23726882.
திருப்பூர் மண்ணின் மைந்தரான நூலாசிரியர் இந்திய, சர்வதேச திரைப்படங்கள் குறித்து எழுதியுள்ள 78 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. கதை கூறல், திரைக்கதையம்சம், கதாபாத்திரம், காட்சியமைப்பு விவரித்தல் கடந்து திரைப்படங்கள் குறித்த பன்முக விவாதம் இந்த நூலின் அடிநாதமாக இழையோடுவது தனிச்சிறப்பு.
'அப்பாக்கள் பெண்ணியவாதிகளாக இருக்கிறார்கள். கணவன்மார்கள் ஏன் பெண்ணியவாதிகளாக இருப்பதில்லை?' என்ற கேள்வியை ஒரு நண்பர் எழுப்ப, அதற்கான விடையை 'திருப்பூர் திரைப்பட விழா'வில் இடம்பெறும் படங்களிலேயே தேடுவதாகக் கூறி, ஆசிரியர் விளக்கமளிப்பது நாவலின் சுவாரசியத்தை இந்த நூலுக்கு அளிக்கிறது. புணேவில் பழைய திரைப்படங்களை சேகரித்து ஆவணக் காப்பகம் உருவாக்கியதில் முக்கிய இடம் வகித்த பி.கே.நாயர் பற்றி ஏறத்தாழ மூன்று மணி நேரம் ஓடும் 'செல்லுலாய்டு மேன்' என்ற படம் "ஓலைச்சுவடிகளைப் பாதுகாத்த உ.வே.சா.வின் பயணம் போன்றது' என்று நூலாசிரியர் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
குறும்படங்கள், குழந்தைகள் திரைப்பட விழா, உலக அளவில் திரைப்படமாக வெளிவந்த நாவல்கள் என ஏராளமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அறிந்திராத தகவல்கள் நூலில் நிறைய இடம்பெற்றுள்ளதால், தகவல் களஞ்சியம் என்றே சொல்லலாம். இந்திய, சர்வதேச திரைப்படங்கள் குறித்த நூல்களை வாசிக்கும் ஆர்வமுடையவர்கள் அவசியம் கவனிக்கவேண்டிய ஆவணம் இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...





