தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

DIN

உலகெங்கும் கலைஞர் (உலகத் தமிழர்களின் புகழஞ்சலி); - (தொகுப்பாசிரியர்)  வி.ஆர்.எஸ்.சம்பத்;  பக்.224; ரூ.300; சட்டக் கதிர் பப்ளிகேஷன்ஸ், 3/2 சுவாதி ராம் டவர்ஸ். ஜூபிடர் காம்ப்ளக்ஸ், 3 துர்காபாய் தேஷ்முக் சாலை, ராஜா அண்ணாமலைபுரம்,  சென்னை-28.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து தனித்துவத்தோடு வெளிவந்துள்ள நூல்களில் இதுவும் ஒன்று.  2020-ஆம் ஆண்டில்  கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவாக காணொலிக் கருத்தரங்கை நடத்தி, உலகத் தலைவர்கள் ஆற்றிய உரைகளைத் தொகுத்து ஓர் நூலாக நூலாசிரியர் வெளியிட்டுள்ளார்.

கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள், தமிழ்த் தொண்டுகள்,  அரசியல் ஆளுமைத் திறன் போன்றவற்றை உடனிருந்தவர்களின் அனுபவம் வாயிலாகவே நூலில் அறிய முடிகிறது. நூலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அணிந்துரை எழுதியுள்ளார்.

புதுவை வே.நாராயணசாமி, கி.வீரமணி, துரைமுருகன்  போன்ற ஆளுமைகளோடு,   மலேசிய முன்னாள் அமைச்சர் சாமிவேலு,  வெளிநாடுகளின் அமைச்சர்களான கயானாவின் மோசஸ் வீராசாமி, மொரீஷியஸின் பரமசிவன் பிள்ளை, தென்ஆப்பிரிக்காவின் ரவி பிள்ளை, மலேசியாவின் டாக்டர் டி.மாரிமுத்து மற்றும்ஆஸ்திரியாவின் வி.ஜெயமாலை, சிங்கப்பூரின் ஆர்.ரவீந்திரன், அமெரிக்காவின் ராஜன் நடராஜன், ஆஸ்திரேலியாவின் சூசை பெஞ்சமின் போன்ற வெளிநாட்டு ஆளுமைகள் பேச்சுகளின் வாயிலாக,  வெளிநாட்டுத் தமிழர்களின் நலனில் கருணாநிதி கொண்டுள்ள நலனை உணர்வுபூர்வமாக அறிய முடிகிறது.

நூலின் பிற்சேர்க்கையில் கருணாநிதியின் அரிய புகைப்படங்களையும் சேர்த்திருப்பது நூலுக்கு மேலும் மெருகூட்டுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.