திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கால்களின் தவம் தேக்வாண்டோ

News image
Updated On :6 நவம்பர் 2023, 2:28 pm

கால்களின் தவம் தேக்வாண்டோ (ஒலிம்பிக் விளையாட்டில் உள்ள தற்காப்புக் கலை) - மாஸ்டர் சே.லோகராஜ்;  பக்.176; ரூ.250; பெ.சேகர் வெளியீடு, சென்னை-14; ✆ 94442 45139.

'தேக்வாண்டோ' எனும் தற்காப்பு வீரகலையை வடிவமைத்து, மனித ஆற்றல் முழுவதையும் ஒருசேரப் பயன்படுத்தும் வீரவிளையாட்டாக கொரிய நிபுணர் அளித்துள்ளார்.  

இளம்வயதிலேயே சாதனைகளைப் புரிந்த நூலாசிரியர் இந்த விளையாட்டின் முக்கியத்துவம், மருத்துவப் பயன்கள், அவசியம் குறித்து  அதற்குரிய செயல்விளக்கப் படங்களுக்காகத் தானே மாடலாக உருவாகி எழுதியுள்ளார். கணினியில் பக்க வடிவமைப்பாளராகப் பணிபுரியும் இவர்,  தேக்வாண்டோ குறித்து பாமரருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில், நல்ல விளக்கப் படங்களுடன் நூலை அழகுற கொண்டுவந்துள்ளார்.

தண்டால், டைட் சிட்டப்ஸ், ஏரோபிக், அன்ஏரோபிக், பிரி கிக், அரைவட்ட கிக், கோடரி உதை, முன் உதை, திருப்புமுனை உதை, பக்க உதை, ஹுக்கிங் கிக், ஸ்பின்னிங் ஹீக்கிங் கிக், பின்பக்க உதை, துள்ளுதல் பின்பக்க - முன் உதை, துள்ளுதல் பறந்த நிலை முன்உதை, பறந்தநிலை திருப்புமுனை உதை, பறந்த நிலை பக்க உதை, துள்ளுதல் சுழற்சி வளை உதை, துள்ளுதல் இருகால் முன் உதை, கால்களால் தாக்கப்படும் குறிப்புகள் என 26 தலைப்புகளில் தேக்வாண்டோ  விளையாட்டை சிறந்த முறையில் கற்க நல்லதொரு பயிற்சியாளராகவே இந்த நூல் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.