இப்படித்தான் உருவானேன்- பழ. கருப்பையா; பக். 336; ரூ.375; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆044 - 4200 9603
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக கலை, இலக்கியம், அரசியல், சமூகம் எனப் பல்வேறு துறைகளிலும் இடையறாது இயங்கிவரும் பழ. கருப்பையா தனது வாழ்வனுபவங்களை 'உள்ளது உள்ளபடி' இந்நூலில் பதிவு செய்திருக்கிறார்.
குறிப்பாக, இவருக்கு காமராஜர் மீது இருந்த பக்தி, ராஜாஜி மீது கொண்ட பிரமிப்பு, பா. ராமச்சந்திரனோடு இருந்த நெருக்கம் எல்லாமே சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன (நூலாசிரியர் ராஜாஜியை சந்தித்த நிகழ்வே கவித்துவமானது). இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தபோது தேசம் குறித்து கவலைப்பட்ட தலைவர்களையும், அதனை எதிர்ப்பதுபோல் பாசாங்கு செய்த தலைவர்களையும் பற்றி பட்டவர்த்தனமாகப் பதிவு செய்துள்ளார்.
காரைக்குடி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட நூலாசிரியருக்காக அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய் காரைக்குடிக்கு வந்து பிரசாரம் செய்தது, தன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசியவரின் சட்டையைப் பிடித்து இழுத்து காமராஜர் அவர் பேச்சை நிறுத்தியது போன்ற செய்திகளைப் படித்தபோது, அன்றைய தலைவர்களின் எளிமையும் நேர்மையும் புரிகிறது.
நூலாசிரியரின் திரைத்துறை அனுபவங்கள் ஏற்ற இறக்கம் நிறைந்தவை (மேஜர் சுந்தரராஜனோடு நூலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவம் ஆண்டென் செக்காவ் கதையைப் படித்த உணர்வை ஏற்படுத்தியது).
நூலாசிரியர், தனது பெருமைகளை மட்டும் குறிப்பிடாமல், தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் ஒளிவுமறைவின்றிப் பதிவு செய்திருப்பதால் இந்நூல் தனித்துவம் பெறுகிறது. சுவையான சம்பவங்களை மிகவும் சுவையாகக் கூறியுள்ளார் நூலாசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொழில் செ(ய்)ய விரும்பு

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு

வரப்பெற்றோம் (02.03.2026)

போத்து
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...