தமிழர் அடையாளம் எது? - திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள்; தொகுப்பாசிரியர் - மகாராசன்; பக்.128; ரூ.150; யாப்பு வெளியீடு, சென்னை-76; ✆9080514506
தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு தளங்களில் குறிப்பாக மொழி, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் திராவிடம் என்ற வார்த்தை சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக புழக்கத்தில் இருக்கிறது. இச்சொல் கட்டமைத்திருக்கும் பொருண்மை, நுண் அரசியல் குறித்த கருத்தாடல்களை இந்நூல் மீளாய்வு செய்துள்ளது.
அயோத்திதாசர், அம்பேத்கர், தேவநேயப் பாவாணர், ம.பொ.சி., சி.பா. ஆதித்தனார், கி.ஆ.பெ. விசுவநாதம் உள்ளிட்ட 15 ஆளுமைகளின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
'தீராவிடம்' என்னும் மொழியே குறுக்கல் விகாரத்தால் திரா விடம் - திராவிடம் என வழங்கலாயிற்று என்று அயோத்திதாசரும், 'தமிழ்' என்னும் சொல்லின் சம்ஸ்கிருத வடிவமே திராவிடம் என்பதாகும் என்று அம்பேத்கரும் சான்றளிக்கின்றனர்.
தமிழர் என்பதனை மறைக்கும் திரையாக - மறுக்கும் சொல்லாக திராவிடம் என்பது அரை நூற்றாண்டுகாலம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ம.பொ.சி., திராவிடம் என்பது வெற்றுச் சொல் என ஜெயபாஸ்கரன் உள்ளிட்டோர் திராவிடம் குறித்து காத்திரமான எதிர் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசிய இனத்தின் அடையாள அரசியல் குறித்த பன்முக உரையாடல்களை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் விரிவாக அலசுவதுடன் மட்டுமல்லாது, இன்றைக்கு திராவிடம் என்ற சொல்லை முன்வைத்து நிகழ்த்தப்படுபவைகளின் அடிப்படை என்ன என்பது குறித்த புரிதலையும் இந்நூல் ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தொழில் செ(ய்)ய விரும்பு

பழமொழி நானூற்றில் கருத்து வெளிப்பாடு

வரப்பெற்றோம் (02.03.2026)

போத்து
வீடியோக்கள்

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...