தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

DIN

எனது டிரெயின்-18 வந்தே பாரத் வரலாறு - சுதான்ஷு மணி (தமிழில் பி.ஆர்.மகாதேவன்): பக்.292; ரூ.350; அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை-4; ✆ 928 928 1314

வந்தே பாரத் திட்டக் குழுத் தலைவராக செயல்பட்ட முன்னாள் ஐ.சி.எஃப். பொதுமேலாளர் சுதான்ஷு மணி இந்திய ரயில்வேயின் முக்கிய சாதனையான வந்தே பாரத் ரயில் திட்டம் உருவாகி செயல்படுத்தப்பட்டதை இந்த நூலில் விவரித்திருக்கிறார்.

'டிரெய்ன்-18 ' என முதலில் அறியப்பட்டு பின் 'வந்தே பாரத்' எனும் பெயரில் இயக்கப்படும் இந்த ரயிலின் நவீன கோட்பாடு வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மதிப்பிடுதல், பரிசோதனை என முற்றிலும் உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, இந்த ரயில் தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது.

ரயில்வே பொறியாளர் ஒருவர் நாட்டின் அதிவேக ரயில் ஒன்றை எப்படி தற்சார்புடன் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் என்பதை மட்டும் விவரிக்காமல் அரசின் செயல்பாடுகள், பல்வேறு துறைகள், நிறுவனங்களில் இருக்கும் போதாமைகள் குறித்து விளக்கும் ஆவணமாக விளங்குகிறது.

இறுக்கமான படிநிலை கொண்ட ரயில்வே துறையின் நிர்வாக அமைப்புக்குள் இருந்தபோதும் நினைத்ததை சாதிக்க முடியும் என்பதை சுதான்ஷு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். சரியான தலைமையும் ஆக்கபூர்வமான அக்கறையும் இருந்தால் இதுபோன்ற ஆயிரக்கணக்கான திட்டங்களை நம்மால் சாதிக்க முடியும் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

காலம் காலமாக ஒரே மாதிரியான ரயில்களை உற்பத்தி செய்த ஐசிஎப் தொழிலாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட தொழில்நுட்பத்தில் ஒரு ரயிலை உருவாக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களையும், பின்னர் ஆர்வத்துடன் உருவாக்கியதையும் இந்நூல் மூலம் அறியமுடிகிறது. வந்தே பாரத் ரயிலை மட்டுமல்லாமல் அதன் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் ஐசிஎப் தொழிலாளர்களின் நலன் குறித்தும் இந்நூல் பேசுகிறது. ரயில் மீது ஆர்வம் உள்ளவர்களும், தற்சார்பு மீது நம்பிக்கை உள்ளவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.