2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

DIN

தமிழ்மொழி வரலாறு - தமிழ் இலக்கிய வரலாறு- முனைவர் அ.ஜம்புலிங்கம்; பக்.424; ரூ.600; இந்துமதி பதிப்பகம், சிதம்பரம்; ✆93459 79726.

தமிழ் மொழி, இலக்கிய வரலாறு தொடர்பாக ஏராளமான நூல்கள் வெளிவந்தபோதிலும், புதிய கோணத்தில் இலக்கிய வரலாற்றை நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தமிழர்களின் அறம், வீரம் உள்ளிட்டவற்றையும், இலக்கிய வரலாற்றுச் செய்திகள் காலவரன் முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. அகத்தியம் தொடங்கி இணையத்தமிழ் வரை சீரான முறையில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

காப்பியங்கள், இலக்கண நூல்கள், சிற்றிலக்கியங்கள் குறித்த குறிப்புகளும், சமணர், பெளத்தர், முகம்மதியர்கள், கிறிஸ்தவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளும் ஒருசேர அமைந்திருப்பது சிறப்பு. பட்டினத்தார் தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு புலவர்கள்,

கவிஞர்கள் பற்றிய சிறு குறிப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. புதுமை மோகம் கொண்டு தோன்றிய ஹைக்கூ கவிதைகளின் வளர்ச்சியும், அதன் சிறப்புகளும் கூறப்பட்டுள்ளன. இசைத் தமிழ், நாவல், சிறுகதைகள், நாடகம் பற்றிய தகவல்கள் மற்றும் எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் பயனுள்ள தகவல்கள். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தமிழ் இலக்கிய ஆய்வும் இணைந்து பயணிக்க இணையத் தமிழும் முக்கியம் என்பதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். தமிழ் மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசுப்பணி போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் தேவையான தகவல்கள் முழுமையாக கிடைக்கும் நூலாகத் திகழும்.

தமிழ் ஆர்வலர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் படிக்க உகந்த நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.