பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கால்கள் பேசும் கால்பந்து (உலகக் கோப்பை 2026)

கால்பந்து ரசிகர்களுக்கும், அதை அறிய விரும்புவோருக்கும் இந்த நூல் அரிய வரப்பிரசாதம். கல்வி நிலைய நூலங்களில் அவசியம் இடம்பெற வேண்டிய நூலும்கூட!

Published On :

கால்கள் பேசும் கால்பந்து (உலகக் கோப்பை 2026)- ப. குணசேகர்; பக்.202; ரூ.200; பண்புப் பதிப்பகம், கோவை- 641 006. ✆ 99941 07302.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஃபிஃபா நடத்தும் உலகக் கால்பந்துப் போட்டிகள் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களின் கவனம் பெற்றது. போட்டியில் 48 நாடுகளின் அணிகள் பங்கேற்றாலும், அவை வடிகட்டி எடுத்த விளையாட்டு தேனசை என்று கூறும் நூலாசிரியர் மிகுந்த சிரத்தையுடன் போட்டியின் முழு தகவல்களையும் நூலாக்கியுள்ளார்.

கால்பந்துப் போட்டிக்கு முன்னோட்டமாக அணிகள் தேர்வு, 103 ஆட்டங்களில் அணிகள் மோதிய விவரங்கள், இறுதிப் போட்டிகள், இதற்கு முந்தையப் போட்டிகள், இதுவரை நடைபெற்ற உலகக் கால்பந்துப் போட்டிகளின் விவரங்கள், ஒவ்வொரு நாட்டின் சிறந்த வீரர்கள், உலகக் கோப்பையின் உருவாக்கமும் அதன் பின்னணியும், சுவாரஸ்ய நிகழ்வுகள் என்று அனைத்துத் தகவல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.

கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் உலகக் கோப்பை போட்டியின் தகவல்களைச் சேகரிப்பதற்குப் பதில் இந்த ஒற்றை நூலிலேயே தெரிந்துகொள்ளும் அளவுக்கு தகவல்களைத் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர்.

நட்சத்திர நாயகர்கள் லியோனல் மெஸ்ஸி, ஜூட் பெல்லிங் ஹாம், மரடோனா, யமால், கிளியன் எம்பாப்வே, கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளிட்டோரின் வாழ்க்கைக் குறிப்பும், கால்பந்தாட்டச் சாதனைகளும் தொகுக்கப்பட்டுள்ளது சிறப்பு. மைதானத்தில் முக்கிய வீரர்கள் கூறிய மேற்கோள்கள், விளையாட்டின் ருசிகரப் பின்னணி என்று நூலில் எண்ணற்ற தகவல்கள் உள்ளன.

கால்பந்து ரசிகர்களுக்கும், அதை அறிய விரும்புவோருக்கும் இந்த நூல் அரிய வரப்பிரசாதம். கல்வி நிலைய நூலங்களில் அவசியம் இடம்பெற வேண்டிய நூலும்கூட!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.