பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தொடுகை (நாவல்)

கணவனைப் பிரிந்த கன்னியம்மாள் தாய் வீட்டுக்குச் சென்று அங்கு பிழைப்புக்கு வழியில்லாமல் பிச்சை எடுப்பதும், அதைப் பார்த்து கணவன் மனம் வெதும்புவதும் அடுத்து நடக்கப்போவதை வாசகர்கள் அறியும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

Published On :

தொடுகை (நாவல்)-ஆறு பேச்சிபாண்டியன்; பக்.192; ரூ.170; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை-600 050. ✆ 044-2625 1968.

காதல் அழகான கூந்தலிலும் தொடங்கும் என்பதுபோல, ஒரு பெண்ணின் கூந்தலைப் பார்த்து அவள் மீது மோகம் கொண்டு விரும்பி திருமணம் செய்து கொண்ட கிராமத்து தம்பதியின் வாழ்வியல் எதார்த்தங்களையும், அதனுள் இழையோடும் ஊடலையும், கடன் பிரச்னையால் கணவன்-மனைவி பிரிவதும், அதனால் உண்டாகும் வேதனைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதே தொடுகை நாவல்.

கதையின் முக்கிய பாத்திரங்களான குருசாமி-கன்னியம்மாள் தம்பதியின் வழித்தோன்றலான நாவல் ஆசிரியர், தனது தாத்தா-பாட்டிக்கு இடையிலான உரையாடல்களை உணர்வுபூர்வமாக எழுத்தில் வடித்து இருப்பதில் வியப்பில்லை.

ஐந்து பிள்ளைகளுக்கு தகப்பனான எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த கதையின் நாயகன் குருசாமி, கடன்பட்டு அதை அடைக்க படும்பாடுகளையும், விவசாய விளைச்சலில் கிடைத்த பணத்தைக் கொண்டு கடனை அடைத்துவிடலாம் என எண்ணிக் கொண்டிருக்கையில் அந்தப் பணத்தை கணவனுக்கு தெரியாமல் கன்னியம்மாள் தனது அண்ணன் மனைவியின் மருத்துவச் செலவுக்கு கடனாக கொடுத்து விடுவதும், அதனால் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் கணவன்-மனைவி பிரிவதுமே கதையின் மையப்புள்ளி.

கணவனைப் பிரிந்த கன்னியம்மாள் தாய் வீட்டுக்குச் சென்று அங்கு பிழைப்புக்கு வழியில்லாமல் பிச்சை எடுப்பதும், அதைப் பார்த்து கணவன் மனம் வெதும்புவதும் அடுத்து நடக்கப்போவதை வாசகர்கள் அறியும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

இறுதியில் கணவர் பட்ட கடனை அடைக்கும் கன்னியம்மாள், அவரை சந்திக்க செல்லும்போது இருவருக்கும் இடையிலான சூழ்நிலை பிரிவால் சந்திக்க முடியாத நிலையில் என்ன நடக்கிறது என்ற கதையின் உச்சகட்டம் துயரமாக முடிவதும், அதுவும் கன்னியம்மாளின் அழகான கூந்தல் விரிந்த இடமாக காட்சி அளிப்பதும், வாழ நினைத்தவர்கள் வீழ்ந்துவிடுவதும் கண்ணீரை வரவழைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.