ஜோதிடம் தொடர்பான பொதுவான சில கேள்விகளும், அதற்கான சரியான விளக்கங்களையும் பார்ப்போம்.
• ருத்திராட்சத்தை எப்போதும் அணிந்து இருக்கலாமா?
ருத்திராட்சத்தை அனைத்து நேரங்களிலும் அணியலாம். இதற்கு மூன்று வகையான தீட்டுகள் மட்டும் ஆகாது. 1.குழந்தைப் பிறப்பு தீட்டு. 2..பூப்பெய்திய பெண்களின் தீட்டு. 3.மரணத்தீட்டு
• மூல நட்சத்திரம் உடையவர் எந்த ராசிக்கல் அணிவது நல்லது?
மூல நட்சத்திரம் தனுசு ராசியில் இருப்பதால் குருவிற்கு உரிய ராசிக்கற்களை அணிவது சிறப்பு. இதனால் ஜாதகத்தில் குரு இருக்கும் இடத்திற்கான பலனைத் தருவார். குருவிற்கு உகந்த ராசிக்கல் கனகபுஷ்பராகம்.
• அதென்ன தாமரைமணி?
தாமரைமணி என்பது தாமரைப்பூவில் உள்ள தாமரையின் விதையாகும். ருத்திராட்சம் போன்றே தாமரைமணியும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். தாமரை மணியை மாலையாக கோர்த்து ஜபமாலையாகப் பயன்படுத்தலாம். தாமரையில் லட்சுமி வீற்றிருக்கிறார். ஆகவே, தாமரைமணியைப் பயன்படுத்துவதால் லட்சுமியின் அருளைப் பெறலாம்.
• தந்தை இறந்த பிறகு, எப்போது மலைக்கோயில் மற்றும் கோயிலுக்கு செல்ல வேண்டும்?
தந்தை இறந்த நாளில் இருந்து ஒரு வருடம் வரை பிரசித்தி பெற்ற சிவாலயங்களுக்கு செல்லக்கூடாது. மலைக்கோவிலுக்குச் செல்லக்கூடாது. புனித நதிகளில் ஒரு வருடம் முடியும் வரை நீராடல் கூடாது.
• மரண யோகம் உள்ள காலத்தில் முதல்முறையாக மருந்து வாங்கி உண்ணலாமா?
மரணயோக காலத்தில் முதல்முறையாக மருந்து வாங்கி உண்ணுவது தவறு. மரணயோக காலத்தில் மருந்து வாங்கி உண்டால், அந்த மருந்தை நாம் ஆயுள் முழுக்க எடுத்துக்கொள்ள வேண்டியதாக வரும்.
எனவே எப்பொழுதும் நோய்க்கு மருந்து உட்கொள்ளும் போது அமிர்த யோகத்தில் எடுத்துக்கொள்வது சிறப்பு. அமிர்த யோகத்தில் உண்ணும் மருந்து அமிர்தமாக மாறி நோயைக் குணமாக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு!

இன்றைய செய்திகள் ஜூன் 4 - நேரலை!

ஜனநாயகன் இணையத்தில் கசிந்த விவகாரம்: மேலும் 6 பேர் கைது!

ஜேஇஇ தரவுகள் கசிவு! கல்வி அமைச்சர் திறமையற்றவர்! கரப்பான்பூச்சி கட்சி
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



