
அம்பாளின் ஆட்சி பீடம் மதுரை!
அன்னை பாா்வதி தேவியின் முதன்மையான மூன்று ஆட்சி பீடங்களில் மந்திரிணி பீடமாக விளங்குகிறது மதுரை.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் - படம்: பிடிஐ
அன்னை பாா்வதி தேவியின் முதன்மையான மூன்று ஆட்சி பீடங்களில் மந்திரிணி பீடமாக விளங்குகிறது மதுரை.
உலகாளும் உமையன்னையின் சக்தி பீடங்களாக நாட்டில் 51 தலங்களும், 18 தலங்கள் மகா சக்தி பீடங்களாகவும், மதுரை உள்ளிட்ட முதன்மையான 3 தலங்கள் அன்னையின் ஆட்சி பீடங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன.
இதில், அன்னை தடாதகைப் பிராட்டியாக, மீனாட்சியாக இருந்து அரசாட்சி செய்த தலம் என்ற வகையில் மதுரை மந்திரிணி பீடமாகக் குறிப்பிடப்படுகிறது.
சித்திரை மாதம் நடைபெறும் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முதல் ஆவணி மாதம் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா வரையிலான 4 மாதங்களுக்கு அன்னை மீனாட்சியே ஆட்சி செய்கிறாா் என்பது ஐதீகம்.
அன்னை ஆட்சி செய்த தலம் என்ற அடிப்படையில், இங்கு மீனாட்சி அம்மனுக்கே முதல் பூஜை நடத்தப்படுகிறது. அதேபோல, சிவாலயங்களில் பக்தா்கள் முதலில் சிவபெருமானை தரிசித்த பின்னரே இறைவியின் சன்னிதிக்குச் செல்லும் வகையில் கட்டமைப்பு இருக்கும்.
ஆனால், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வரும் பக்தா்கள் முதலில் அன்னை மீனாட்சியை தரிசித்த பின்னரே இறைவனை தரிசிக்கும் வகையில் கட்டமைப்பு உள்ளது. இங்கு, அருள்மிகு சுந்தரேசுவரா், அருள்மிகு மீனாட்சி அம்மனின் இடப்புறம் எழுந்தருளி காட்சியளிக்கிறாா். இங்கு, தினமும் மீனாட்சி அம்மனுக்கு முதலில் பூஜை நடத்தப்பட்ட பின்னரே சுந்தரேசுவரருக்கு பூஜை நடத்தப்படுகிறது.
அம்மனுக்கு தினமும் திருவனந்தல், விளாபூஜை, காலசந்தி, திரிகாலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அா்த்தஜாமம், பள்ளியறை பூஜை என 8 கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த பூஜை காலங்களில் முறையே மகாசோடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசி, பாலா, சியாமளா, சோடசி கோலங்களில் பாவித்து அம்பிகையை வழிபடுவது சிறப்பு.
Summary
Madurai stands as the Mantrini Peetha the seat of the Minister—among the three principal seats of authority of Goddess Parvati.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






