Enable Javscript for better performance
இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்- Dinamani

சுடச்சுட

    இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்

    By ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர்  |   Published on : 09th October 2021 01:26 PM  |   அ+அ அ-   |    |  

    prediction

    இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் பல வகைகளில் வரும்: வாரப் பலன்கள்


    அக்டோபர் 8 முதல் 14ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்துக்கு ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர் கணித்துக் கொடுத்திருக்கும் வாரப்பலன்கள்.

    ***

    மேஷம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

    வசதி வாய்ப்புகள் பெருகும். வாகனப் பிராப்தி கிட்டும். சரியாகத் திட்டமிட்டு செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். சுபச் செலவுகளைச் செய்து மகிழ்வீர்கள். உடலில் இருந்த சோர்வும், மனக் குழப்பமும் விலகும்.

    உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை நம்பி எந்த காரியத்தையும் ஒப்படைக்காதீர்கள். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகள் நண்பர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகளுக்கு பழைய கடன்கள் வசூலாகும். உடல் உழைப்பு பெருகி லாபம் உயரும். 

    இதையும் படிக்கலாமே.. 2019ல் குழந்தை பெற்ற 21 ஆயிரம் பேர் சிறுமிகள்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

    அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் சிரமமான காரியங்களையும் முடித்து விடுவீர்கள். நேர்மையான செயல்பட்டால் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிலவினாலும் மனதில் ஏதோ ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாகும். வருமானம் பெருகும். மாணவமணிகளுக்கு வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உண்டு.பெற்றோர் சொற்படி கேட்டு நடக்கவும். 

    பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 08, 12. 
    சந்திராஷ்டமம்: 09,10, 11.

    •••
    ரிஷபம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

    உங்களின் செயல்களில் விவேகம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்புகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். ஆன்மிகத்தில் நாட்டமும் உண்டாகும். 

    உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் நன்கு யோசித்த பிறகே எதிலும் முதலீடு செய்யுங்கள். வேற்று மொழி இனத்தவரால் சில பிரச்னைகள் வரலாம். விவசாயிகள் செலவுகளைக் குறையுங்கள். கூட்டு முயற்சிகளையும் தவிர்த்திடுங்கள்.  

    அரசியல்வாதிகள் வெற்றியினால் மமதை கொள்ளாமல் சிந்தித்து காரியமாற்றுங்கள். மேலிடத்தின் பார்வை உங்கள் மீதே இருப்பதால் கவனம் தேவை. கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவால் மனம் மகிழ்வீர்கள். சக கலைஞர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். பெண்மணிகள் கணவருக்குத் தெரியாமல் பிறர் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். தேவையற்ற பேச்சுக்களைப் புறக்கணியுங்கள். மாணவமணிகள் தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று கவனத்தை சிதற விடாமல் இருக்கவும். வெற்றி நிச்சயம். 

    பரிகாரம்: நந்தீஸ்வரரை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 09, 10. 
    சந்திராஷ்டமம்: 12, 13.

    •••
    மிதுனம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (மிருகசீரிஷம் 3-ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

    தோல்விகள் நிரந்தரம் என்று எண்ணி சோர்ந்து விடாதீர்கள். பிரச்னைகளில் தெளிவு ஏற்படும். எதிர்வரும் இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். நல்லவர்களின் நட்பைத் தொடருங்கள். போலியான நண்பர்களை அடையாளம் காண்பீர்கள்.  

    உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடமும், சக ஊழியர்களிடமும் பொறுமையைக் கையாளுங்கள். வியாபாரிகள் போட்டிகளை சமாளிப்பீர்கள். எந்த ஏமாற்று வேலையிலும் ஈடுபடாதீர்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை தற்போது எடுக்க வேண்டாம். கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். 

    அரசியல்வாதிகள் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவீர்கள். தொண்டர்களை வழி நடத்த பொறுமையைக் கையாளுங்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பண வரவும் திருப்தி தரும். பெண்மணிகள் குடும்பத்தினரை அனுசரித்து அன்பு பாராட்டுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவி ஒற்றுமை மிக அவசியம். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பிராணாயாமம், தியானம், யோகா போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.

    பரிகாரம்: ஸ்ரீபார்வதி, பரமேஸ்வரரை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 08, 10. 
    சந்திராஷ்டமம்: 14.

    •••

    கடகம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

    வாராத கடன்களால் சற்று மன உளைச்சலில் இருப்பீர்கள். இதுவரையில் தடைப்பட்டு வந்த காரியங்கள் நலமாக நிறைவேறும். உற்றார், உறவினர்களை அனுசரித்து உதவிகளைச் செய்யுங்கள். தெய்வக் காரியங்களில் ஏமாற்று வேலைகளில் ஈடுபடாமல் தர்மமாக நடந்து கொண்டால் வியத்தகு பலன்களை அனுபவிப்பீர்கள். 

    உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் பழைய கடன்களைத் தீர்ப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக ஈடுபடுங்கள். 

    அரசியல்வாதிகள் மீது கட்சி மேலிடத்தின் பார்வை விழும். பிறரை அனுசரித்து நடந்து, பாராட்டையும், பதவியையும் பெறுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். விருதும், பாராட்டுகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு உடலாரோக்கியத்தில் கவனம் தேவை. கணவருடன் அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்து தடைகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். விருப்பமான பாடப் பிரிவில் சேர்வீர்கள். 

    பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 09, 10. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••
    சிம்மம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

    குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் சற்று கவனத்துடன் நடந்து கொள்ளுங்கள். தொழிலில் இருந்த ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் 
    கவனம் வையுங்கள்.  

    உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளுடன் கவனமாகப் பழகுங்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் சற்று சிரமம் காண்பீர்கள். விவசாயிகலுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளை தற்பொழுது எடுக்காதீர்கள். 

    அரசியல்வாதிகள் பிடிவாதங்களையும், உண்மையில்லாச் செயல்களையும் தவிர்த்திடுங்கள். தங்களால் இயன்ற மக்கள் நலப் பணிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். புதுப்புது ஒப்பந்தங்கள் கைக்கு வரும். பெண்மணிகள் கணவரின் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் பெருகும். சரும நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடன் மருத்துவரை நாடி தீர்த்துக் கொள்ளுங்கள். 

    பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 08, 13. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••
    கன்னி
    01.10.2021 முதல் 07.10.2021 வரை
    (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

    பணப்புழக்கம் அதிகரிக்கும். புதிய கடன்கள வாங்க மாட்டீர்கள். நெருங்கியவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழகவும். எடுத்த காரியங்கள் அனைத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்கசிரமப்படுவீர்கள். 

    உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் சில சலுகைகளைப் பெறுவீர்கள். உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதுப் புது நுணுக்கங்களைப் புகுத்துவீர்கள். நல்ல லாபம் அடைவீர்கள். விவசாயிகள் கூலி தொழிலாளர்களிடம் அனுசரணையோடு நடந்து கொள்ளவும். நன்மைகள் அதிகரிக்கும். 

    அரசியல்வாதிகளுக்கு செயல்திறன் அதிகரிக்கும். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினர் பிறரை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாதீர்கள். கடும் போட்டிக்குப் பிறகே புதுப்புது வாய்ப்புகள் வரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் உபாதைகளினால் மனம் சஞ்சலம் அடையும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படித்து வரவும்.

    பரிகாரம்: பெருமாளை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 02, 04. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••
    துலாம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

    பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோரின் ஆசீர்வாதங்களால் நல்லவையே நடக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளிப்பீர்கள்.

    உத்தியோகஸ்தர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகவும். வியாபாரிகள் அதிக முதலீடு செய்ய வேண்டாம். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படலாம். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய நிலங்களை குத்தகைக்கு எடுப்பீர்கள். 

    அரசியல்வாதிகள் திட சிந்தனையுடன் செயலாற்றி வெற்றி பெறுவீர்கள். ரகசியங்களை எவரிடமும் நம்பி பகிராதீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். புதிய ஒப்பந்தங்கள் அதிக முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும். பெண்மணிகள் சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட நினைப்பீர்கள். இல்லத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் இறையருளால் நிறைவேறும். பெற்றோரின் பாசத்தால் நெகிழ்வீர்கள். 

    பரிகாரம்: ஸ்ரீராமரை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 08, 13. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••
    விருச்சிகம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

    எடுத்த காரியங்கள் சற்று இழுபறியாக இருந்தாலும் வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிறையும். பொருளாதாரத்தில் சற்று வளர்ச்சி கூடும். வாகனம் வாங்குவீர்கள்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரித்து லாபம் உயரும். கூட்டு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். மகசூல் அதிகரிக்கும். 

    அரசியல்வாதிகளுக்கு மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு தருவார்கள். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களால் சற்று அவப்பெயர் ஏற்படும். பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். பெண்மணிகள் பிறரிடம் பேசும் பொழுது வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். பலவற்றையும் புரிந்துகொண்டு மெüனம் காத்தல் நலம். மாணவமணிகளின் விருப்பத்தை பெற்றோர்கள் நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்புடன் அறிவு சார்ந்த விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.

    பரிகாரம்: வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 09, 13. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••

    தனுசு
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

    பணவரவு சுமாராக இருக்கும். இல்லத்தில் சுப காரியங்கள் கை கூடும். வழக்கு விவகாரங்கள் சுமூகமாக முடியும். பிறருக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். புதிய நண்பர்களைத் தவிர்க்கவும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிறு குறைகள் ஏற்படும். மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும். கவனத்துடன் உழைக்கவும். வியாபாரிகள் கூட்டு சேர்ந்து வியாபாரம் செய்வதைத் தவிர்க்கவும். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். விவசாயிகளுக்கு நீர் வரத்து அதிகம் இருப்பதால் மகசூல் உயரும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். 

    அரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் தேவை. உங்களது ரகசிய முயற்சிகளை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். கலைத்துறையினர் புதுப்புது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். சக கலைஞர்களை மதித்து நடக்கவும். பெண்மணிகள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சரிவிகித உணவு, உடற்பயிற்சி ஆரோக்கியத்தைக் காக்க உதவும். மாணவமணிகள் வெளிநாடு சென்று படிக்க ஆர்வம் காட்டுவீர்கள். முயற்சிகள் யாவும் நல்ல பலனைத் தரும்.

    பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 09, 14. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••

    மகரம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

    உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை உயரும். திடீர் வெளியூர் பயணங்களால் லாபம் உண்டாகும். தீய நட்பினால் பணவிரயம் ஏற்படலாம் உற்றார் உறவினர்கள்
    ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். 

    உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணிகளில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை நல்லமுறையில் நடைபெறும். புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீர்வரத்து அதிகரிப்பால் மகசூல் பெருகும். 

    அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவினால் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப பலன்களை அடைவீர்கள். கலைத்துறையினருக்கு பணவரவு நன்றாக இருக்கும். திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தந்தைவழி சொத்துகளினால் சில வில்லங்கங்கள் தோன்றும். மாணவமணிகள் வெளி விளையாட்டுகளில் வெற்றி பெற மிகுந்த கவனம் தேவை. படிப்பில் ஆர்வம் கூடும். 

    தவறாது யோகா, பிராணாயாமம் செய்து வரவும்.
    பரிகாரம்: ஸ்ரீமஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 11, 12. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••

    கும்பம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

    நீங்கள் திட்டமிட்ட செயல்கள் தாமதமாகவே நடக்கும். வீண் அலைச்சல்களும் உடல் சோர்வும் உண்டாகும். மனதில் குழப்பம் நீங்கித் தெளிவு பிறக்கும். எந்த ரகசியங்களையும்  பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

    உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களைச் சற்று அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் புதிய தொழில்களைத் தொடங்க வேண்டாம். எதிலும் திட்டமிட்டு செயல்படுதல் அவசியம். விவசாயிகள் நீர் வளத்தை அதிகப்படுத்த முயற்சி எடுப்பீர்கள். கூட்டு விவசாயத்தில் கவனம் செலுத்துவீர்கள். 

    அரசியல்வாதிகள் தொண்டர்களின் உதவியுடன் மேலிடத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை திறமையாகக் கையாளுவீர்கள். கலைத்துறையினர் பாதுகாப்புடன் பயணங்களை மேற்கொள்ளவும். திறமைக்கேற்ற ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். வீடு மாற்றம் செய்ய முனைவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவமணிகள் பெற்றோரை மதித்து நடக்கவும். அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படித்தால் மதிப்பெண்கள் உயரும்.

    பரிகாரம்: குலதெய்வத்தை வழிபட்டு வரவும். 
    அனுகூலமான தினங்கள்: 13, 14. 
    சந்திராஷ்டமம்: இல்லை.

    •••

    மீனம்
    08.10.2021 முதல் 14.10.2021 வரை
    (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

    உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.
     
    உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் முழு கவனம் செலுத்துவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் வரவு செலவு கணக்குகளைச் சரிவர பராமரிக்கவும். கூட்டுத் தொழிலும் நல்ல படியாகவே நடக்கும். விவசாயிகள் கடுமையாக உழைத்து விளைச்சலை பெருக்குவீர்கள். கூலித் தொழிலாளர்களுக்கும் நன்மை செய்வீர்கள். 

    அரசியல்வாதிகள் தங்கள் திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு வரவேண்டிய பழைய பாக்கிகள் வந்து சேரும். பொருளாதார நெருக்கடியை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். பெண்மணிகள் குழந்தைகளின் வருகையால் மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானம் பல வகைகளில் வரும். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களுடன் பொழுதை வீணாக்காமல் அறிவுசார்ந்த விஷயங்களில் ஈடுபடுங்கள். 

    பரிகாரம்: ஐயப்ப சுவாமியை வழிபட்டு வரவும்.
    அனுகூலமான தினங்கள்: 10, 11. 
    சந்திராஷ்டமம்: 08.
     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp