நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

இந்த ஆங்கில புத்தாண்டில் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? (விடியோ)

2019 - ஆங்கில புத்தாண்டில் 12 ராசி அன்பர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்ப்போம். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:31 pm IST


2019 - ஆங்கில புத்தாண்டில் 12 ராசி அன்பர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்ப்போம். 

மேஷம் 

செவ்வாயை ராசிநாதனாக கொண்ட மேஷ ராசி அன்பர்கள் இந்த ஆண்டு உங்ளுக்கு சிறப்பாக அமைய குரு இணைவுப்பெற்ற ஸ்தலமான திருச்செந்தூர் முருகனை, வியாழக்கிழமைகளில் வணங்கி வர உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். தினசரி கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வரலாம். 

ரிஷபம் 

சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட ரிஷப ராசி அன்பர்கள் இந்த ஆண்டில் நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சனியின் குருவான கால பைரவர். அவரை வணங்கிவர பிரச்னைகள் யாவும் விலகும். பெருமாள் ஆலயத்திற்குச் சென்று தாயாரை வழிபட்டு வரலாம். 

மிதுனம்

புதனை ராசிநாதனாக கொண்ட மிதுன ராசி அன்பர்கள் இந்த ஆண்டு முழுவதும் முடிந்தபோதெல்லாம் கும்பகோணம் நாச்சியார்கோயிலுக்கு அருகில் இருக்கும் குடும்ப சனி 
கோயிலுக்குச் சென்று வரலாம். பெருமாளை வழிபட்டு வருவதும் நல்ல பலனை அளிக்கும். 

கடகம்

சந்திரனை ராசிநாதனாக கொண்ட கடக ராசி அன்பர்கள் இந்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க பட்டீஸ்வரம் துர்கை அம்மனை வணங்கி வர உங்கள் வாழ்வில் மேலும் நன்மைகள் கூடும். தினசரி அம்பாளை வழிபட்டு வருவதும் நல்ல பரிகாரமாக அமையும். 

சிம்மம் 

சூரியனை ராசிநாதனாக கொண்ட சிம்ம ராசி அன்பர்கள் இந்த வருடத்தில் நீங்கள் உங்கள் குலதெய்வத்தையும் சிவ பெருமானையும் வணங்கி வர உங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வருவதும் சிறந்த பரிகாரமாகும். 

கன்னி

புதனை ராசிநாதனாக கொண்ட கன்னியா ராசி அன்பர்கள் இந்த வருடத்தில் நீங்கள் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை புதன் கிழமைகளில் வணங்கி வர உங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். குலதெய்வ வழிபாடு செய்து வரலாம். 

துலாம்

சுக்கிரனை ராசிநாதனாக கொண்ட துலா ராசி அன்பர்கள் இந்த ஆண்டில் நீங்கள் மகாலக்ஷ்மியை வணங்கிவர உங்கள் வாழ்வில் மாபெரும் வளர்ச்சியைக் காணலாம்.

விருச்சிகம்

செவ்வாயை ராசிநாதனாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்கள் தினசரி கந்தகுரு கவசம் பாராயணம் செய்ய வரலாம். அருகில் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வருவதும் சிறந்த பரிகாரமாகும். 

தனுசு

தேவகுரு என்று அழைக்கக்கூடிய தனகாரகன் குருபகவானை ராசிநாதனாக கொண்ட தனுசு ராசி அன்பர்கள் இந்த ஆண்டில் உங்கள் வாழ்வில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கத் திருச்செந்தூர் முருகனையும், தென்குடி திட்டை குருபகவானையும் வணங்கி வரலாம். 

மகரம்

ஆயுள்காரகன் சனியை ராசிநாதனாக கொண்ட மகர ராசி அன்பர்கள் இந்த ஆண்டு உங்கள் இன்னல்கள் நீங்கி வாழ்வில் வசந்தங்கள் வீச நீங்கள் தர்ம சாஸ்தாவான ஐயப்பனை வணங்கி வரத் துன்பங்கள் தொலைந்து மகிழ்ச்சி பெருகும். விநாயகர் வழிபாடு செய்து வருவதும் நல்ல பலனை தரும். 

கும்பம் 

சனியை ராசிநாதனாக கொண்ட கும்ப ராசி அன்பர்கள் இந்தாண்டு வாழ்வில் மகிழ்ச்சி பொங்க கும்பகோணம் நாச்சியார்கோயிலுக்கு அருகில் இருக்கும் குடும்ப சனி கோயிலுக்குச் சென்று வரலாம். ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வருவது நல்ல பலனை கொடுக்கும். 

மீனம்

தேவகுரு குருபகவானை ராசிநாதனாக கொண்ட மீன ராசி அன்பர்கள் இந்த வருடத்தில் நாகலாபுரத்தில் உள்ள வேதநாராயண பெருமாளையும், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரையும் வணங்கிவர ஆதவனைக் கண்ட பனிபோல உங்கள் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும். கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வரலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.